உங்களின் நகம் உடையாமல் செம்மையாக மற்றும் அழகாக வளர இதை செய்யுங்கள்
வணக்கம் நண்பர்களே, தற்போது நம்மில் பலர் மற்றும் ஒரு சில பெண்களும் சரி ஆண்களும் சரி நகங்களை அழகாக வைத்திருக்கவே நினைப்பார்கள். நகங்கள் குறிப்பிட்ட அளவு நீளம் வளர்ந்த பின்னர் எதாவது வேலை செய்யும் போது நகம் எளிதில் உடைந்து விடும். நகம் உடைவதை தடுக்கும் சில எளிய வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம்.
அடிக்கடி உங்களின் நகம் உடைந்து போவதை தடுப்பதற்கான சிறந்த வழிகள்:
நமது நகங்களின் மேல் நகப்பூச்சு (நெயில் பாலிஷ்) அடிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு நமது நகத்தை பாதிக்காமல் பார்த்து கொள்ள முடியும். மேலும் துணி துவைக்கும் போதோ அல்லது அழுக்குகளை கழுவும் போது நகத்தில் அழுக்குகள் ஒட்டாமல் நகப்பூச்சு பாதுகாக்கும்.




அதாவது நகங்கள் ஈரமாக இருக்கும் போது கடினமான வேலைகள் செய்வதை குறைக்க வேண்டும். ஈரமான நகம் எளிதில் மற்றும் விரைவில் உடையக் கூடும்.
உங்களின் நகங்களை நீங்கள் எப்போதும் ஒரே அளவில் வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும். நக வெட்டியானது தரமானதாக இருக்க வேண்டும். நக வெட்டியை பயன்படுத்தும் போது நகத்தை சுற்றியுள்ள தோலில் படாமல் மற்றும் வெட்டாமல் இருக்க வேண்டும்.
நீங்கள் உங்களின் தலைமுடிக்கு பயன்படுத்துவதை போலவே நகங்களுக்கான கிரீம்களை பயன்படுத்தினால் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் அருமையாகவும் வைத்திருக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக