சின்ன உதட்டை கொஞ்சம் எடுப்பா பெருசா காட்டணுமா? லவங்கப்பட்டை தேய்ங்க.
முகம் என்பது ஒருவரின் அழகை முதலில் வெளிபடுத்தும் ஒரு பகுதியாக உள்ளது. குறிப்பாக கண், மூக்கு மற்றும் உதடுகள் முக அழகை அதிகரித்து காட்டும் பகுதிகளாகும். அதிலும் அழகான பெரிய உதடுகள் எப்போதும் கவர்ச்சியானவை. சிலருக்கு இயற்கையில் சிறிய உதடுகள் அமைந்திருக்கலாம். அத்தகையவர்கள் பெரிய உதடுகளை விரும்பும்போது லிப்ஸ்டிக் அல்லது மேக்கப் மூலம் அவற்றைப் பெறலாம். சிலர் ஒப்பனை அறுவை சிகிச்சை மூலமாகவும் இதனைப் பெற முயற்சிக்கின்றனர். ஆனால் இது தவறான நம்பிக்கை மற்றும் அவை நிரந்தரமானவை அல்ல.
வீட்டில் இருந்து சில தீர்வுகள் மூலமாக அழகான பெரிய உதடுகளைப் பெற முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
லவங்கப் பட்டை எண்ணெய் மற்றும் வாசிலின்
லவங்கப் பட்டை, உதடுகளின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்கள் ஊக்குவிக்கப்பட்டு உதடுகள் இயற்கையாக பெரிதாகின்றன.
தேவையான பொருட்கள்:
வாசலின் சிறிதளவு
லவங்கப் பட்டை எண்ணெய் 3 துளிகள்
செய்முறை:
ஒரு சுத்தமான கிண்ணத்தில் வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு சிட்டிகை சேர்க்கவும். அதே கிண்ணத்தில் 2 அல்லது 3 துளி லவங்க பட்டை எண்ணெய்யை சேர்க்கவும். இந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து உதட்டில் தடவவும். சிறந்த தீர்வுக்கு சிறிது நேரம் இந்த கலவை உங்கள் உதட்டில் இருக்கட்டும்.
நீங்கள் பயன்படுத்தும் லிப் க்ளாசில் ஒரு துளி லவங்க பட்டை எண்ணெய்யை சேர்த்தும் பயன்படுத்தலாம். மேலே கூறிய முயற்சி பலனளிக்கும் வரை தினமும் வெளியில் செல்வதற்கு முன் இந்த முறையை முயற்சிக்கலாம்.
லவங்க பட்டை எண்ணெய்யை மிகவும் உயர்ந்த தரத்தைக் கொண்டது. தரம் குறைந்த எண்ணெய் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் எதிர்மறை விளைவுகள் உண்டாகலாம். உதடுகள் சருமத்தில் மென்மையான பாகம் என்பதால், எந்த ஒரு ஒப்பனை பொருள் அல்லது பாதுகாப்புப் பொருள் பயன்படுத்துவதற்கு முன், அது உங்கள் சருமத்திற்கு ஏற்றதா என்பதை அறிந்து பின் செயல்படுத்தவும்.
லவங்கப்பட்டை தூள்
லவங்கப் பட்டை தூள் மற்றும் வாசலின் சேர்த்து உங்கள் உதடுகளை பெரிதாக்கலாம்.
இதுவும் லவங்க எண்ணெய் போன்ற விளைவைத் தரும். உங்களுக்கு எண்ணெய் அல்லது தூள், இவற்றில் எளிதாகக் கிடைக்கும் பொருளை நீங்கள் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
லவங்கப்பட்டை தூள் சிறிதளவு லிப் க்ளாஸ் அல்லது வாசலின்
செய்முறை:
ஒரு லவங்கப் பட்டையை எடுத்து நொறுக்கிக் கொள்ளவும். உதட்டில் லிப் க்ளாஸ் அல்லது வாசலின் தடவிக் கொள்ளவும். பிறகு உதட்டில் லவங்கப் பட்டை தூளை ஒரு பஞ்சால் தடவவும்.
அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உங்கள் உதட்டில் இந்த தூள் அப்படியே இருக்கட்டும். பிறகு சுத்தமான நீரால் உதட்டை கழுவவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக