ஞாயிறு, 24 ஜூன், 2018

வெட்டி வேர் பற்றி தெரியுமா? அதன் மருத்துவ குணங்கள் ஏராளம்

வெட்டி வேர் பற்றி தெரியுமா? அதன் மருத்துவ குணங்கள் ஏராளம்

வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு மற்றும் தாகத்தையும் தணிக்கும். தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய், வாந்தி பேதி ஆகியவற்றிற்கு இது நல்ல மருந்தாக பயன்படுகிறது.

கோடை காலத்தில் ஏற்படும் உடலில் எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து காயவைத்து பொடி செய்து அதனுடன் பெருஞ்சீரகம் பொடி சம அளவு சேர்த்து வெந்நீரில் 200 மி.கி. குடித்து வந்தால் சரியாகும்.
வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து சில நாட்கள் புசினால் காயங்கள் சரியாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி பூசலாம்.

வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் அவை மறைந்துவிடும்.
வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகி வந்தால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணுக்கும் சிறந்த மருந்தாகும். வெட்டி வேரை சிறு சிறு துண்டுகளாக சிறுதளவு போட்டு அவற்றுடன் கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து அடுத்த நாள் அதை அரைத்து அதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்ததே தெரியாமல் அழிந்து விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக