ஞாயிறு, 24 ஜூன், 2018

துளசி இலையை பயன்படுத்தி டீ தயாரிக்கும் செய்முறை மற்றும் பயன்கள்

துளசி இலையை பயன்படுத்தி டீ தயாரிக்கும் செய்முறை மற்றும் பயன்கள்

துளசி இலையை சாறு எடுத்து அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் சரியாகும். இரத்த அழுத்தம், இருமல், சளி ஆகியவற்றையும் குணமாக்கும். துளசி கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்: துளசி இலை - 1/2 கப், தண்ணீர் - 2 கப், டீத்தூள் - 2 டீஸ்பூன், சர்க்கரை - தேவையான அளவு, பால் - தேவையான அளவு.
செய்முறை: துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். பின் நன்றாக கொதித்த பின் டீத்தூள், சர்க்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்ட வேண்டும். தேவையான அளவு சூடான பாலை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தேவையான சுவையான உடலுக்கு ஆரோக்கியமான துளசி டீ தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக