சனி, 16 ஜூன், 2018

தைராய்டு குணமாக பொதுவாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கைவைத்தியம்

தைராய்டு குணமாக பொதுவாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து கைவைத்தியம்

வெங்காயம்:
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தூங்குவதற்கு முன் வெங்காயத்தை பாதியாக வெட்டி அதன் சாற்றினை கழுத்துப் பகுதியில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இந்துப்பு:
தைராய்டு பிரச்சனைக்கு இந்துப்பு மிகவும் நல்லது. இதில் சல்பர் புளோரைடு, அயோடின், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் குளோரைடு ஆகியவை உள்ளது. எனவே இந்துப்பை சமையலில் சேர்த்து வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாகும்.
தேங்காய் எண்ணெய்:
தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்காமல் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. 
பசலைக்கீரை: 
பசலைக் கீரைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறு ஆகியவற்றில் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கி தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக