வெள்ளி, 6 ஜூலை, 2018

சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அரச மரத்தை சுற்றக்கூடாது தெரியுமா

சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அரச மரத்தை சுற்றக்கூடாது தெரியுமா

சூரிய அஸ்தமனத்தின் பின்னர் அரசமரத்தை சுற்றக்கூடாது குழந்தைவரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவது வழக்கமே! பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் காலையில் சுற்றலாம். ஆனால் சூரியன் மறைந்த பின் அரசமரத்தைச் சுற்றக்கூடாது.அதேவேளை, அரசமர வழிபாட்டிற்கு திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகியன மிகவும் உகந்த தினங்களாகும்.
அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த விடயங்கள் பிரமாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன. அரசமரத்தின் தெற்கு பக்க கிளையில் உருத்திரனும், மேற்கு கிளையில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் வாசம் புரிகின்றனர்.
அதனால், அரசமரத்தை வலம் வந்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும். தசரதர் சனீஸ்வரர் மீது பாடிய சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமையன்று அரசமரத்தடியில் அமர்ந்து படிப்போருக்கு சனிதோஷம் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக