ஞாயிறு, 1 ஜூலை, 2018

வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்?


வீட்டில் செல்வம் பெருக என்ன செய்ய வேண்டும்?

👉 அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

👉 செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

👉 விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம்.

👉 ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

👉 குலதெய்வத்தை தினமும் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

👉 தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

👉 வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும்.

👉 வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

👉 வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும்பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் சேரும்.

👉 ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

👉 குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

👉 சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

👉 வியாழக்கிழமையன்று குரு ஹோரையில் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

👉 செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்-வாங்கல் இவற்றை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம்.

என்னென்ன செய்யக்கூடாது?

👉 வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. அமங்கல சொற்களை பேசக்கூடாது.

👉 அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது.

👉 இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை கொட்டக்கூடாது.

👉 வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடாமல் அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

👉 பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்கூடாது.

👉 விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறருக்கு கொடுக்கக்கூடாது.

👉 விருந்தினர் சென்றபின் வீட்டை கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

👉 உப்பைத் தரையில் சிந்தக்கூடாது.

👉 வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

👉 நகத்தை வெட்டி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

👉 இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பின்பற்றி வந்தால் செல்வம் சேரும். லட்சுமி தேவியும் நம் வீட்டில் வாசம் செய்வாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக