திங்கள், 9 ஜூலை, 2018

உலகின் விலை உயர்ந்த நாய் வகைகள் இவைதான்

உலகின் விலை உயர்ந்த நாய் வகைகள் இவைதான்!

உலகில் அதிக விலைக்கு விற்கப்படும் நாய் வகைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
#1.சவ் சவ் என்ற இந்த நாய் ரகத்தின் தாயகம் சீனா. இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
#2.பாரா ஹவுண்ட் என்ற இந்த நாயின் தாயகம் மால்டா நாடு. இதன் விலை இரண்டு லட்ச ரூபாயிலிருந்து நான்கு லட்ச ரூபாய் வரை இருக்கும்.
#3.அகிட்டா என்ற இந்த நாயின் தாயகம் ஜப்பான். இந்த நாயின் குறைந்த பட்ச விலை 2.5 லட்சம் ரூபாய்.
#4.சைனீஷ் கிரஸ்டட் ஹேர்லெஸ் என்ற இந்த நாயின் தாயகம் சீனா. வித்தியாசமான தோற்றமுடைய இந்த நாயின் விலை தோராயமாக 3 லட்ச ரூபாய் வரை இருக்கும்.
#5.திபெத்தியன் மஸ்டிஃப் என்ற இந்த நாயின் தாயகம் திபெத்,சீனா,நேபாளம், இலங்கை மற்றும் கிழக்கு ஆசியா.இந்த நாய் 2 மில்லியன் டாலர் வரை சீனாவில் ஏலத்தில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்தது. இதன் தோராய விலை 3 லட்ச விலை முதல் 5 லட்ச ரூபாய் வரை.
#6.கனடியன் எஸ்கிமோ என்ற இந்த நாயின் தாயகம் கனடா. வட அமெரிக்காவின் அரிய வகை நாயினமாக கருதப்படும் இதன் விலை தோராயமாக 6 லட்ச ரூபாய்.
#7.ஒரு நல்ல ஆரோக்கியமான, திறமையான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் நான்கு லட்ச ரூபாய் வரை விற்பனையாகும்.
#8.சமயோட் என்ற இந்த வகை நாயின் தாயகம் சைபீரியா. குழந்தைகளின் சிறந்த தோழன் என அழைக்கப்படும் இந்த நாய் நான்கு லட்ச ரூபாயிலிருந்து 7 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
#9.ராட்வெயிலர் நாய்கள் அதிக அளவில் காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றின் குறைந்தபட்ச விலை தோராயமாக 4.5 லட்ச ரூபாய்.
#10.லாசென் நாய்தான் உலகில் அதிக விலை கொண்ட நாயாக கருதப்படுகிறது. அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த நாயின் குறைந்தபட்ச விலை 5 லட்ச ரூபாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக