செவ்வாய், 3 ஜூலை, 2018

சூரிய நமஸ்கார பயிற்சிக்கான சில பொதுவான குறிப்புகள்

சூரிய நமஸ்கார பயிற்சிக்கான சில பொதுவான குறிப்புகள்

சூரிய நமஸ்காரம் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பயிற்சி செய்யும் முறை : புதியதாக பழகுபவர்கள் தினமும் 2 முதல் 3 சுற்று பயிற்சி என ஆரம்பித்து சில வாரங்களுக்கு ஒருமுறை உடல் வலிமைக்கு ஏற்றபடி சில சுற்றுக்களை அதிகப்படுத்திக் கொண்டு போய் ஒரு வேளைக்கு 12 சுற்று வரை பயிற்சி செய்யலாம். 12 சுற்றுகளுக்கு அதிகமாக செய்பவர்கள் நிலை 4ல் பின்னோக்கி வைத்த காலையே மீண்டும் நிலை 9ல் முன்னால் வைத்து ஒவ்வொரு சுற்றிலும் இதே போல் இரண்டு கால்களையும் மாற்றிச் செய்ய வேண்டும்.

சூரிய நமஸ்காரத்தை 27 சுற்றுகளுக்கு அதிகமாக தினமும் காலை, மாலை செய்பவர்கள் வேறு ஆசனப் பயிற்சிகள் செய்யாமலேயே அதிக அளவு பயனைப் பெற முடிகிறது. ஆனால் 27 சுற்றுக்களைவிட அதிகமாக 54, 108 சுற்று செல்ல விருப்பம் உள்ளவர்கள் குருவின் நேரடிப் பார்வையில் பயில்வது நல்லது.

தடைகுறிப்பு : குடலிறக்கம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் உள்ளவர்கள் சூரிய நமஸ்காரப் பயிற்சி செய்யக் கூடாது. பெண்கள் மாதவிலக்கு நாட்களில் செய்யக்கூடாது.

பயிற்சிக்குறிப்பு : பருவ காலத்திற்கு தகுந்தபடி பயிற்சி செய்ய வேண்டும். குளிர் காலத்தில அதிகமாகவும் கோடை காலத்தில் சற்று குறைத்தும் பயிற்சி செய்வது நல்லது. தன் சக்திக்கு மீறிய அளவு அதிக சுற்றுப் பயிற்சி செய்யக் கூடாது. எவ்வளவு சுற்றுக்களை களைப்பின்றி செய்ய முடிகிறதோ அவ்வளவு நேரம் மட்டும் பயிற்சி செய்யவும்.

சூரிய நமஸ்காரத்தையும் உடற்பயிற்சிகளையும் ஒன்றாக செய்யக் கூடாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக