ஞாயிறு, 3 ஜூன், 2018

கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது?

கர்ப்பம் தரிக்க சிறந்த நேரம் எது?

தம்பதிகள் உறவு கொள்ளும் நேரத்தை பொருத்து அவர்களுக்கு பிறக்க போகும் குழந்தையின் குணங்கள் மாறுபடும். உடல் அற்ற நட்சத்திரங்களான மிருக சீரிஷம், அவிட்டம் , சித்திரை . தலை அற்ற நட்சத்திரங்களான புனர்பூசம் விசாகம் விசாகம் பூரட்டாதி, போன்ற நட்சத்திரங்களில் குழந்தையை பெற வேண்டி ஆண் பெண் ஒன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் பகலில் கரு தரித்து பிறக்கும் குழந்தை அசுர குணம் கொண்டதாயும், இரவில் கரு தரித்து பிறக்கும் குழந்தை அனைத்து வழிகளிலும் , மிக சிறந்த குணாதிசயத்தை கொண்ட குழந்தையாக பிறக்கும். 
ராவணனின் தந்தை விச்சிரவசு .தாய் கேசி. இவர்களின் உறவில் பிறந்த ராவணனின் கரு உதித்த நேரம் மாலை வேளையில் அதாவது மாலை வேளையில் விளக்கு வைக்கும் நேரம். கும்பகர்ணன் கரு உத்தித்த நேரம் . சூர்ப்பனகை கரு உதித்த நேரம் சூரிய உதயத்துக்கு பிறகுள்ள காலை ஏழு மணிக்குள். இவர்கள் மூவருமே அசுர குணம் கொண்டவர்கள். காலையில் பிறந்த சூர்ப்பனகை காமுகி ஆனாள் .
நள்ளிரவில் பிறந்த கும்பகர்ணன் நியாத்தை எடுத்து சொல்பவனாயினும் சபல புத்தி மற்றும் பயத்தால் ராவணனுக்கு உதவி செய்தான். ராவணன் பக்தனாய் இருந்து என்ன பயன். அவன் பிறர் சொல் கேட்டான். அடுத்தவன் மனைவியை விரும்பினான். அதனால் அவன் அழிந்தான்.
அதாவது கரு உதிக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அனைத்து வகையிலும் சிறப்பாக இருக்கும். பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணியிலிருந்து 4.30 குள் அல்லது அதிகாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிக்குள் அதாவது சூரிய உதயத்திற்கு முன். இந்த வேளைகளில் உருவாகும் கரு. அனைத்து வகையிலும் சிறப்பான குண நலன்களை பெற்று சிறப்புடன் விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக