சாப்பிட்டபின் கண்டிப்பாக செய்யக்கூடாத ஐந்து செயல்கள்
குளித்தல்: சிலர் பசியின் காரணமாகவோ அல்லது வேலை அலுப்பின் காரணமாகவோ உணவு உண்ட பின்பு குளிப்பார்கள். இவ்வாறு நீங்கள் குளிக்கும்போது உங்கள் உடலின் வெளிபரப்பு குளிர்ச்சியடையும் இதனால் உடல் தன்னிச்சையாக அதன் வெப்பநிலையை மாற்ற முயற்சி செய்யும் இதனால் உங்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும்.
தூங்குதல்: உணவு உண்ட உடனே தூங்கும் பழக்கும் பலருக்கும் உள்ளது. உணவு செரிப்பதற்கு சில மணி நேரங்கள் தேவைப்படும் உடனே உறங்குவதன் காரணமாக செரிமான கோளாறுகள் ஏற்படும்.
தேநீர் அருந்துதல்: உணவு உண்ட பின் அருந்தும் தேநீரால் உங்களுக்கு உணவால் கிடைக்கும் இரும்புசத்தில் 80 சதவீதத்திற்கு மேல் குறைந்துவிடும்.
பழங்கள் உண்ணுதல்: பெரும்பாலானோர் உணவு உண்ட பின்பே பழங்களை உண்ணுவார்கள். பழங்கள் எளிதாக செரிக்கும் தன்மை கொண்டவை எனவே நீங்கள் பழங்கள் உண்ட பின் உணவு உண்டால் எளிதில் செரிமானமாகும். சாப்பிட்ட பின் பழங்கள் உண்டால் இரண்டுமே செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக