திங்கள், 11 ஜூன், 2018

தர்பூசணி, வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டா ஆண்களுக்கு மட்டும் ரொம்ப ரொம்ப நல்லது

தர்பூசணி, வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டா ஆண்களுக்கு மட்டும் ரொம்ப ரொம்ப நல்லது

ஆண்களுக்கு ஏற்படும் பாலுறவு பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்று பாலுறவில் ஆண்குறியை விறைக்க அல்லது விறைப்பை நீட்டிக்க இயலாது உடலுறவு கொள்ள முடியாதிருத்தல் ஆகும்.

ஆண்குறி விறைத்து எழுவது குருதி உள்ளேறி ஆண்குறிக்குள் இருக்கும் பஞ்சு போன்ற பாகங்களில் தங்குவதால் ஏற்படும் நீர்ம விசையால் ஆகும். பாலுணர்வு தூண்டுதலால் மூளையிலிருந்து ஆண்குறியிலுள்ள நரம்புகளுக்கு சமிக்ஞைகள் அனுப்பப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இந்நிலையில் விறைப்பு ஏற்படாதிருக்குமேயானால் அது உடல் ரீதியான விறைக்க இயலாமை என்று குறிக்கப்படுகின்றது. 
மேலும் உளவியல் சார் விறைக்க இயலாமையில் எண்ணங்கள் அல்லது உளவியல் காரணங்களால் விறைத்தலோ பாலுறவோ கொள்ள இயலாதிருத்தல் ஆகும். இது வெகு அரிதாகக் காணப்பட்டாலும் இதனை குணமாக்க முடியும். பெரும்பாலும் மருந்து என்று வழங்கப்படும் ஆறுதல் மருந்துக்கு உளவியல் இயலாமை குணப்படும். ஆனால் உடல் ரீதியான விறைக்க இயலாமை குறைபாடுகளை நீக்க மருந்துகள் மிக முக்கியம்.
அம்மருந்துகளில் மிக முக்கியமான மூலக்கூறுகளில் ஒன்று L-சிட்ரினின் ஆகும். இந்த L-சிட்ரினின் நமது இயற்கை உணவுகளில் அதிகம் காணப்படுகிறது. அதில் வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணியில் இந்த L-சிட்ரினின் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டும் உள்ளது. அந்த ஆய்வில் வெள்ளரிக்காய் சாப்பிட்ட 24 ஆண்கள் ஒரு மாத காலத்திற்குள் அவர்களது விறைப்பு தன்மை அதிகமாகிருப்பதை  நிரூபித்து உள்ளனர். 
இந்த L-சிட்ரினின் அதிகம் உள்ள மற்ற சில உணவு பொருட்கள்
 
இந்த L-சிட்ரினின் அதிகம் உள்ள மற்ற உணவு பொருட்கள்
  • கொண்டைக்கடலை
  • நிலக்கடலை
  • பாதாம்
  • சாக்கலேட் 
  • மீன்
  • மாமிசம்
  • பூண்டு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக