வெள்ளி, 15 ஜூன், 2018

கிர்ணிப்பழம் ஏன் கோடை காலத்துக்கு ஏற்ற பழம் மற்றும் அதன் மருத்துவ குணம் என்ன?

கிர்ணிப்பழம் ஏன் கோடை காலத்துக்கு ஏற்ற பழம் மற்றும் அதன் மருத்துவ குணம் என்ன?

கிர்ணிப்பழம் மற்ற பழங்களை விட வேகமாக உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தருகிறது. உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழ துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். கண்கள் பிரகாசிக்கும்.
பசியின்மை, அமிலத் தன்மை, அல்சர் எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, ஆகிய அனைத்துக்கும் நல்லது. பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, பித்தத்தையும், வாதத்தையும் குறைக்க உதவுகிறது.
கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும்.
கிர்ணி விதையை பவுடர் செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
வைட்டமின்-பி காம்ப்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் - சி ஓரளவு இருப்பதால் வயிற்றுப் புண்ணுக்கும் மிகவும் நல்லது
குறிப்பு : பொட்டாஷியம், சோடியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக