வெள்ளி, 15 ஜூன், 2018

உடல் எடை குறைக்க சர்க்கரை சாப்பிடலாம்! ஆனா இது வெள்ளை சர்க்கரை இல்ல தேங்காய் சர்க்கரை !

உடல் எடை குறைக்க சர்க்கரை சாப்பிடலாம்! ஆனா இது வெள்ளை சர்க்கரை இல்ல தேங்காய் சர்க்கரை !

தேங்காய் சர்க்கரை சாப்பிடுங்க? இனி டயாபெட்டீஸ்க்கு டாட்டா காட்டுங்க. நாம் தினமும் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் ஏராளமான தீமைகள் ஒழிந்து கிடக்கின்றன.
எனவே நீங்கள் ஒரு ஆரோக்கியமான சர்க்கரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் தேங்காயிலிருந்து பெறப்படும் சர்க்கரை நமது உடலுக்கு மிகவும் நல்லது. தேங்காயிலிருந்து பெறப்படும் தண்ணீரை சூடாக்கி காய்ச்சி இந்த சர்க்கரையை தயாரிக்கின்றனர். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அடங்கியுள்ளன.

நாம் தினமும் உபயோகிக்கும் வெள்ளை சர்க்கரையை போலவே இதிலும் கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது. இப்படி ஏராளமான நன்மைகளைத் தரும் இந்த தேங்காய் சர்க்கரை பற்றி இக்கட்டுரையில் காண உள்ளோம். 

ஊட்டச்சத்துக்கள்
இதில் விட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், இரும்புச் சத்து, காப்பர், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் பைட்டோ நியூட்ரிஷனான ப்ளோனாய்டுகள், பாலிபினோல், ஆந்தோசயனின் போன்றவைகளும் உள்ளன.

டயாபெட்டீஸ்
இந்த தேங்காய் சர்க்கரை டயாபெட்டீஸ்க்கு பெரிதும் பயன்படுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் குளுக்கோஸ் உறிஞ்சும் திறனை மெதுவாக்கி சர்க்கரை அளவை சமநிலையாக்குகிறது. அமெரிக்க நீரிழிவு நோய் சங்கத்தின் படி நீரிழிவு நோயாளிகள் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த தேங்காய் சர்க்கரையை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். ஏனெனில் இதில் 15 கலோரிகள், 4 கிராம் கார்போஹைட்ரேட் போன்றவைகள் அடங்கியுள்ளன.

வெள்ளை சர்க்கரையை விட மேலானது
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் அதிக அளவு ப்ரக்டோஸ் மட்டுமே உள்ளது. கலோரிகள் எதுவும் கிடையாது. அதே மாதிரி அதிகமான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும் இதில் இல்லை.
ஆனால் இந்த தேங்காய் சர்க்கரையில் இரும்புச் சத்து, ஜிங்க், கால்சியம், பொட்டாசியம், பாலிபினோல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. உணவு மற்றும் ஆராய்ச்சி மையம் கருத்துப்படி வெள்ளை சர்க்கரையில் இருப்பதை விட இதில் இரும்புச் சத்து மற்றும் ஜிங்க் இருமடங்கு அதிகமாக உள்ளது என்கின்றனர்.

குறைவான ப்ரக்டோஸ்
இந்த ப்ரக்டோஸ் பொருள் நமது உடலில் அப்படியே கொழுப்பாக மாறி தங்கி விடும். இதை உடைக்க நமது கல்லீரலுக்கு ட்ரைக்ளிசரைட்ஸ் தேவைப்படுகிறது. எனவே இந்த ட்ரைக்ளிசரைட்ஸ் அதிகமாகும் போது இரத்த அழுத்தம், உடல் பருமன், டயாபெட்டீஸ், கெட்ட கொழுப்புகள், நல்ல கொழுப்பு குறைவு போன்ற ஏராளமான பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். தேங்காய் சர்க்கரையில் வெறும் 20-30% மட்டுமே ப்ரக்டோஸ் உள்ளது. 70-75% இதில் சுக்ரோஸூம் காணப்படுகிறது.

உடல் எடை குறைதல்
தேங்காய் சர்க்கரை நமது உடலில் கொழுப்புகள் தங்குவதை தடுக்கிறது. இதில் குறைவான ப்ரக்டோஸ் இருப்பதால் கொழுப்புகள் உடலில் தங்குவது குறைக்கப்படுகிறது. ஆனால் வெள்ளை சர்க்கரை உடலுக்கு தீங்கை மட்டுமே கொடுக்கிறது. எனவே தேங்காய் சர்க்கரையை உணவில் சேருங்கள்.

உடல் சக்தி
இதிலுள்ள சத்துக்கள் நமது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இந்த சத்துக்கள் நமது உடலில் நீண்ட நேரம் இருப்பதால் நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன் செயல்பட முடியும்.
Third party image reference
பயன்படுத்துவது எப்படி?
நீங்கள் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த தேங்காய் சர்க்கரையை பயன்படுத்தலாம். இது வெள்ளை சர்க்கரையை விட அதிக இனிப்பு சுவையுடன் காணப்படும். எனவே இதை குறைந்த அளவு எடுத்து பயன்படுத்துங்கள்.
ஜூஸ், ஸ்மூத்தி போன்ற எனர்ஜி டிரிங்க்இல் கூட இதை சேர்த்து குடிக்கலாம். உங்கள் தினசரி காபி மற்றும் தேநீரில் கூட இதை சேர்த்து வந்தால் டயாபெட்டீஸ் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் நிம்மதியாக வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக