எண்ணெய்ல இவ்ளோ விஷயம் இருக்கா?
பிசு பிசுன்னு இருக்கு, அவசரத்துக்கு வாஷ் பண்ண முடியாதுங்கற காரணத்துனாலேயே பலருக்கும் எண்ணெய் பிடிக்காது. ஆனால் தவிர்க்கவே முடியாத 'பியூட்டி புராடெக்ட்'ல எண்ணெய் முக்கியமானது. உங்கள் முகத்தை ஈரப்பதத்தோட வைத்திருக்க, க்ளோவாக்க, கிருமி தொற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, முடியை வலிமையாக்க என்று பல நல்ல விஷயம் எண்ணெயில் இருக்கிறது. அப்படி எந்த எண்ணெய் எதற்கு நல்லது என்று பாக்கலாமா?
ஃப்ளாக்ஸ் சீட் ஆயில்: இது ஆரோக்கியமான இதயத்துக்கு ரொம்பவே உகந்தது. பலரும் இதை இதயத்துக்கு நல்லது என்பதுடன் நிறுத்திக்கொள்கின்றனர். ஆனால், இதில் இருக்கும் அழகு பயன்கள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை. இதில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு, சென்ஸிடிவ் ஸ்கின்னுக்கு சிறந்தது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தோல் சம்பந்தமான வியாதிகள் குணமாகும்.
அவகேடோ ஆயில்: விட்டமின் சி அதிகம் உள்ள ஆயில் இது. கூடவே விட்டமின் இ, கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பும் இருக்கிறது. இது சருமத்தை மிருதுவாக்கும், வயதான தோற்றத்தையும் தள்ளிப் போடும். இந்த எண்ணெய்யில் நிறைவாக உள்ள ஓலிக் அமிலம், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்கிறது. சரும அரிப்புகளைத் தடுக்கிறது, சருமத்துக்கு ஈரப்பதத்தைத் தருகிறது, சருமம் சிதைவடைவதில் இருந்து தடுக்கிறது. இதுபோல் ஏராளமான சரும மற்றும் ஆரோக்கிய பலன்களைக் கொண்டது அவகேடோ எண்ணெய்.
ஜொஜோபா ஆயில்: இதில் துத்தநாகம், தாமிரம், விட்டமின் பி & இ இருக்கிறது. இது சருமத்தை வலிமையாக்கும். சருமத்தில் எண்ணெய் வழிதல் பிரச்னையை சரி செய்யும். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப்படுத்தி, சருமத்துக்கு பொலிவை தரும். அதேநேரத்தில், வறண்ட சருமத்துக்கும் இது நல்லது. எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்துவதால் முகப்பரு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தரும். பித்தவெடிப்பு போன்றவற்றை சரி செய்யும்.
ஆர்கன் ஆயில்: ஒமேகா 3 கொழுப்பு, ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் இ இதில் உள்ளன. இவை, முடியையும் ஸ்கின்னையும் ஷைனிங்காக்கும். சருமத்தின் கொலாஜின் உற்பத்தியை பெருக்கும். முகப்பருக்களைப் போக்கும். பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படக் கூடிய வரிகளை மறைய வைக்கும். தீக் காயங்கள் மீது இந்த எண்ணெய்யை தடவி வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஹைபிஸ்கஸ் ஆயில்: செம்பருத்தி இலை முடிக்கு நல்லதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இதில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட், விட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவை முடி வளர்ச்சியைத் தூண்டிவிட்டு, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும், முடியின் வேர்களையும் வலிமையாக்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக