ஆத்தி கரப்பான் பூச்சியின் பாலில் இவ்வளவு ரகசியம் இருக்கா இத குடிச்சா அதுக்கு 4 மடங்கு அதிகமாம்...
கரப்பான் பூச்சியின் பால் தான் வருங்காலத்தில் புதிய சூப்பர் ஃபுட் மற்றும் பால் பொருட்களின் மாற்றாக அமையும் என்று கூறினால் பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளப்பார்கள், சிலரோ வாஷ் பேசின் பக்கம் வாந்தியெடுக்க ஓடுவார்கள்.
இது,உண்ண ஏற்றதா இல்லையா? பொதுவாக பூச்சிகளான வெட்டுக்கிளிகள், புழுக்கள், வண்டுகள், சிலந்திகள், எறும்புகள் மற்றும் கரையான்கள் அவைகளிலுள்ள பிரதான நிலையான புரதத்தின் காரணமாக சாப்பிடப்படுகின்றன.
பசிபிக் பீட்டில் கரப்பான் பூச்சிகள் சிறந்த ஊட்டச்சத்து நிரப்பப்பட்ட மில்க் கிரிஸ்டல்ஸ் ஆகும். 2016 ல் ஒரு அறிக்கையின்படி இது மனிதர்களுக்கும் நன்மையளிக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது
கரப்பான் பூச்சியின் பாலை எவ்வாறு எடுப்பது?
பெண் பசுபிக் பீட்டில் காக்ரோச் அடர்த்தியான புரோட்டீன்- திரவத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த பூச்சிகள் முட்டைகளை இடுவதில்லை பதிலாக இளம் குட்டிகளை ஈனுகின்றன.
பெண் பசுபிக் பீட்டில் காக்ரோச் அடர்த்தியான புரோட்டீன்- திரவத்தை உற்பத்தி செய்கிறது.
இந்த பூச்சிகள் முட்டைகளை இடுவதில்லை பதிலாக இளம் குட்டிகளை ஈனுகின்றன.
கருமுட்டைகள் உள்ளே வளர ஆரம்பித்தவுடன், பெண் கரப்பான் பூச்சி, தனது அடையிலிருந்து ஒரு மஞ்சள் நிற திரவப் பாலைக் கொடுக்கிறது.
இந்தப் பால் மிகவும் உயர்ந்த சத்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
மேலும், கரப்பான் பூச்சியின் பாலானது பூமியில் மிகவும் சத்தான மற்றும் உயர் கலோரிகள் கொண்ட ஒரு உணவாகும். பசுவின் பாலைவிட நான்கு மடங்கு புரதத்தைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
இது உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்களை கொண்டுள்ளது.
கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை ஆற்றலை வழங்குவதற்கு உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக