வெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா?
வெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா?
முட்டையில் மற்ற எந்த உணவுகளையும் விட அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அத்தகைய முட்டையை கோடைகாலத்தில் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வது உடம்புக்கு அவ்வளவு நல்லதல்ல என்று சொல்வார்கள்.
அதிலும் குறிப்பாக, குழந்தைகளுக்கு கோடை காலத்தில் முட்டை கொடுக்காதீர்கள் என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? அப்படி கொடுப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கினறன என்று பார்ப்போம்.
புரதம் நிறைந்த முட்டை
என்னதான் முட்டையை அதிகமாக சாப்பிடக்கூடாது என்று சொன்னாலும் கூட, முட்டை முழுக்க முழுக்க புரதத்தால் ஆனது. புரதம் மிக அதிக அளவில் உள்ள உணவில் முட்டைக்கு நிகர் வேறு உணவு இருக்க முடியாது. அதேபோல் அதிக அளவிலான வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
உடலின் வெப்பம்
முட்டை அதிகமாக சாப்பிட்டால், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பெரியவர்கள் வெயில்காலத்தில் முட்டை சாப்பிட்டால், அவர்கள் தங்களுடைய உடலை சமாளித்துக் கொள்ள முடியும். குழந்தைகள் சாப்பிடும்போது உடல் நலக்கோளாறுகள் உண்டாகும். அவற்றை குழந்தைகளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் தான், தாய்மார்கள் குழந்தைகளுக்கு வெயில்காலத்தில் முட்டை கொடுக்க தயங்குகிறார்கள்.
எலும்பு வளர்ச்சி
முட்டையில் எவ்வளவு புரதம் இருக்கிறதோ அதேபோல, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி மிக அதிக அளவில் நிறைந்திருக்கிறது. அவை எலும்புகளை மிக உறுதியாக வைத்திருக்கவும் எலும்பு வளர்சியில் மிக முக்கியப் பங்காற்றுகிறது.
ஊட்டச்சத்துக்கள்
வைட்டமின், புரோட்டீன் மட்டுமல்லாமல் மினரல்கள், கால்சியம், பாஸ்பரஸ், ஜிங்க், அயோடின், மிக அதிக அளவிலாக ஃபேட்டி ஆசிட், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
மாற்று உணவு
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு புரதத்தை நிறைவு செய்வதற்கான முட்டைக்கு பதிலாக மாற்று உணவுக்கு வெயில்காலத்தில் முன்னுரிமை வழங்குகிறார்கள்.
எத்தனை முட்டை கொடுக்கலாம்?
ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள், என்ன சொல்கிறார்கள் என்றால், முட்டை உடலின் வெப்பநிலையை அதிகரிக்கும் தான். ஆனால், குழந்தைகளுக்கு முட்டை கொடுப்பதை கோடை காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் முட்டை ஒரு நாளின் ஊட்டச்சத்து தேவையில், பெரும்பான்மையை நிறைவு செய்யும். அதனால் தாராளமாக ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் வீதம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படலாம் என்றே ஊட்டச்சத்து நிபுணர்களும் மருத்துவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக