சுடசுட சுவையான புனே ஸ்பெஷல் தந்தூரி டீ...
தந்தூரி என்றதுமே சிக்கனும், ரொட்டியும் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் தந்தூரி டீயை கேள்விப் பட்டிருக்கிறீர்களா? புனேவில் தற்போது இந்த தந்தூரி டீ தான் டிரெண்டிங். புனேவிற்கு அருகில் உள்ள கராடி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரமோத் மற்றும் அமல் ராஜ்டியோ. பெரும்பாலானோர்களைப் போல் இவர்களும் இஞ்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தார்கள். அப்போது தான் டீ கடை தொடங்கும் ஐடியா இவர்களுக்கு உருவானது.
வெறும் டீ கடை என நடத்தினால், பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்பதால் மண்டைக் குடைந்து யோசித்து, இறுதியாக தந்தூரி டீ போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
தந்தூரி அடுப்பில் வைக்கப்பட்ட மண் குடுவையில், தேநீரை ஊற்றி இயற்கையான முறையில் இந்த ஆவி பறக்கும் தந்தூரி டீ உருவாகிறது. இதற்காக பாலையும் அந்த காலத்தில் செய்தது போல் மண் சட்டியிலேயே காய்ச்சுகிறார்கள். இவர்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் பலரும் ஆர்வமுடன் இந்த தேநீரை பருகுகிறார்கள். இதனால் மண் குடுவை விற்பனையும் அங்கு அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக