செவ்வாய், 12 ஜூன், 2018

சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?....

சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?....




சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா.???
நம் பகுதியில் அரிசியும் கோதுமையும் அதிகம் விளைகிறது, அதேபோல் நம் உடம்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் அவைதான் சிறந்த உணவாகும். அரிசியிலும் கோதுமையிலும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது, ஆனால் நாம் தினசரி உணவில் இவை சேர்காமல் உண்பதில்லை. நாம் சாப்பிடும் உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்பு சத்து என மூன்று முக்கிய சத்துக்கள் இருக்கிறது. ஆனால் கார்போஹைட்ரேட் என்பது மிக அதிக அளவில் இருக்கிறது, சப்பாத்தியையும் சாப்பாடையும் ஒப்பிட்டு பார்த்தால் 2% தான் வித்தியாசம்.இதேபோல் இந்த இரண்டு உணவுகளிலும் கார்போஹைட்ரேட் அளவும் கலோரிகளின் மதிப்பும் ஒன்றுபடும், ஆனால் சத்துக்களின் மதிப்பு வேறுபடும்.... சப்பாத்தியில் புரதச்சத்தும் நாற்ச்சத்தும் அதிகமாக இருக்கும், சாப்பாடு சுலபமாக செரிமானம் ஆனாலும் அதில் ஸ்டார்ச் அதிகம். சப்பாத்தி செரிமானமாக நேரமானாலும் அது பசித்தன்மையை அடக்கிவிடும் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சாதகமாக இருக்கும்.சப்பாத்தி எடை குறைய தகுந்தது என்றாலும் அளவோடு சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு சப்பாத்திகள் போதுமானதாக இருக்கும்.ஏனென்றால் சாப்பாடு வயிற்று நிரம்பாது சப்பாத்தி நிரம்பும். இன்னும் சில சுவாரஸ்யமான தகவல்களுக்கு அணுகவும்
Dietician - கீர்த்திகா உதயமூர்த்தி.... 
Wellness coach - உதயமூர்த்தி....



1 கருத்து: