புதன், 8 ஏப்ரல், 2020

தோற்க கற்றுக் கொள்வோம்


#தோற்க_கற்றுக்_கொள்வோம்

என்னடா இது புதுசா இருக்கு?
எல்லாரும் வாழ்க்கையில வெற்றி பெறனும், எல்லாத்துலயும் முதலா வரணும்னு தான் சொல்லுவாங்க. இங்க என்னன்னா தோற்க கற்றுக்கொள்வோம்னு இருக்கேனு பாக்குறீங்களா? ஆமா, எல்லாரும் வெற்றின்ற ஒரு விஷயத்துல மத்த ஒன்ன மறந்துடுறோம். ஒன்னு மட்டும் இல்ல நெறய மறந்துடுறோம். என்னனு கேக்குறீங்களா?

ஏதோ, ஒரு போட்டியோ அல்லது ஒரு தேர்வோ நாம ஜெய்ச்சவங்களையும் முதல்ல வந்தவங்களையும் மட்டுமே கொண்டாடுறோம். போற்றி புகழுறோம். மத்தவங்களை என்னைக்காவது நினைச்சி பாத்திருக்கோமா? உண்மையை சொல்லனும்னா நினைக்குறது இல்ல.

எதார்த்தமா சொல்லனும்னா தேர்வோ, போட்டியோ இங்க அது ஒரு சண்டையாகவும், நான் பெரியவனா, நீ பெரியவனா என்ற மோதலாக தான் இருக்கு. தவிர, போட்டி என்பது நம் திறமையை வளர்த்துக்குற ஒரு நிகழ்வாகவும், தேர்வை நம் அறிவை பண்படுத்துற விசயமாகவும், அதாவது அறிவை சுயபரிசோதனை செஞ்சிக்கிற ஒரு விசயமா நாம இது வரைக்குமே பார்ப்பதில்ல.

மாறா,  இங்க என்னவா பாக்குறாங்கன்னா, போட்டியை ஒரு மானம் சார்ந்த பிரச்சனையாவும், தோல்வியை ஒரு கேவலமான முடிவாகவும் தான் இந்த உலகமும், சமூகமும் நமக்கு கத்து கொடுக்குது. ஆனால், அது மோசமான முட்டாள் தனம்னு தான் சொல்லனும். மனிதர்கள் நாம கத்துகிட்டா தான அதுல வெற்றி பெற முடியும். வெற்றி பெறலன்னா நாம இன்னும் கத்துக்குனும்னு தான அர்த்தம். சரி தான நான் சொல்றது...!!

எல்லா வெற்றியும், தோல்வியில் இருந்து தான ஆரம்பம் ஆகுது. தோல்வி என்பது வீழ்வது அல்ல. வெற்றி பெற பயிற்சி எடுப்பது. பாத்திங்கனா, ஐன்ஸ்டீன் மின்சாரத்தை கண்டுபுடிக்கரத்துக்கு முன்னாடி ஒரு லட்சம் தடவை தோற்று போனாராம். எல்லாமே தோல்வியில தான் முடுஞ்சதாம். அதுக்கப்புறம் கொஞ்ச கொஞ்சமா கத்துகிட்டு தான் நாம இன்னைக்கு பயன்படுத்துற மின்சாரத்தையே கண்டுபுடிச்சாராம்.

தோல்வின்றது வீழ்வது அல்ல. நாம் எழ கத்துக்கிறது. வீழ்வது தப்பில்லை எழ முயற்சிக்காம இருப்பது தான் தப்பு!

என்னாங்க தோற்று போகலாமா, ரெடியா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக