புதன், 8 ஏப்ரல், 2020

உங்களுக்கு தெரியுமா? கால் விரல்களில் இரண்டாவது விரல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா???

உங்களுக்கு தெரியுமா? கால் விரல்களில் இரண்டாவது விரல் ஏன் பெரிதாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா???


பொதுவாக கால்களின் இரண்டாவது விரல்களை வைத்து அவர்களின் எதிர் காலத்தைக் கூட கூற முடியும். ஒவ்வொருவருக்கும் கால்களில் உள்ள விரல்கள் பெரிதாகவும், சிறியதாகவும் இருக்கும். மனித உடல் அமைப்புகளுமே ஒவ்வொருவருக்கும் பெரிதான கால்கள், கைகள் என்று வெவ்வேறாக உள்ளது. ஆனால் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை கால்களின் இரண்டாவது விரல் நிர்ணயிப்பதாக கருதுகிறார்கள். 
   கால்களில் உள்ள இரண்டாவது விரல் பெரிய விரலை விட, சிறிதாக இருந்தால் அவர் கடின உழைப்பை பூமியில் விதைக்கிறவர்களாகவும் அதனால் உயர்வதும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. அத்தகைய மனிதர்கள் மற்றவர்களுக்கு உண்மையுள்ளவர்களாகவும் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிறவர்களாகவும் இருப்பார்கள். அதனால் மற்றவர்கள் இவர்களுக்கு மிகுந்த மரியாதையைக் கொடுப்பார்கள். இவர்கள் வாழ்க்கை சந்தோஷமானதாக காணப்படும். 
     உங்கள் கால் விரல்களில் உள்ள பெரிய விரலை விட இரண்டாவது விரல் நீளமாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே காணப்படும். அவர்கள் விளையாட்டுதனமான மனநிலையை உடையவர்கள். மற்றவர்கள் எந்த மனநிலையில் உள்ளார்கள் என்பதை உணராமல் எப்பொழுதும் விளையாட்டாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளும் தேடி வரும். ஆனால் இயற்கையில் மிகவும் அன்பான குணம் உடையவர்கள். தனது மனைவியை, கணவரை மிகவும் நேசிப்பவர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக