திங்கள், 6 ஏப்ரல், 2020

கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் வரும் ஊட்டச்சத்து உணவுகள்.

கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் வரும் ஊட்டச்சத்து உணவுகள்.

உங்க வீட்டுல இருக்க குழந்தைகள், பெரியவர்களுக்கு இந்த உணவு முறைகளை ஏப்ரல் 15 வரைக்கும் கடைபிடிங்க...

காலை 7 : மணிக்கு இஞ்சி, தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது.

காலை : 8.30 மணிக்கு 2 இட்லி, சாம்பார், ஆனியன் சட்னி, சம்பா ரவை கோதுமையால் ஆன உப்புமா, 2 வேக வைத்த முட்டை, பால், பழரசம் ஆகியவையும்,

காலை 11 :  மணிக்கு சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி,தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீரில் சிறிது உப்பை சேர்த்தும் கொடுக்கப்படுகிறது.

பகல் 1 :  இரண்டு சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேக வைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப் வழங்கப்படுகின்றது.

மாலை 3 :  மணிக்கு மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தண்ணீரும்

மாலை 4 : மணிக்கு : பருப்பு வகைகளில் மூக்கு கடலை சுண்டல் ஒரு கப் கொடுக்கப்படுகின்றது.

இரவு 7 :  மணிக்கு 2 சப்பாத்தி, ஆனியன் சட்னி, இட்லி அல்லது சம்பா ரவா கோதுமை உப்புமா, ஒரு முட்டை வழங்க படுகிறது.

நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பணியில் இருக்க கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும், முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவு பொருட்கள் தொடர்ந்து 3 வேளையும் வழங்கப்பட்டு வருகிறது.

சுஜாதா.
ஊட்டச்சத்து நிபுனர் .
சென்னை ராஜீவ்கந்தி அரசு மருத்துவமனை. #🏋🏼‍♂️ஆரோக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக