சனி, 4 ஏப்ரல், 2020

அசர வைக்கும் அணிகலன்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...

அசர வைக்கும் அணிகலன்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க...


  • ஆடைகள் நம்முடைய அழகை அதிகமாக்கிக் காட்டுகின்றன. அதேநேரத்தில் ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டால் அழகு மேலும் கூடுகிறது. நாம் அணிந்திருக்கும் உடைகளின் கலருக்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமான அணிகலன்களைத் தேர்வு செய்து அணியும்போது, நம்மை பார்ப்பவர்கள் முக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவர். எனவே, உடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் அணிகலன்களைத் தேர்வு செய்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அணிகலன்கள் நமக்கு ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.நகைகளை மட்டுமே அணிகலன்கள் என கருதக் கூடாது. நகைகளோடு சேர்ந்து காலணிகள், ஹேட் பேக், கண்ணாடி, வாட்ச், பெல்ட், ஸ்கார், வாசனைத் திரவியங்கள், துப்பட்டா, பெல்ட், தொப்பி, கர்ச்சப், டை போன்றவையும் அந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை நகைகளே. இன்றைக்கு நகைகளை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே நகைகள் மீது பிரியம் இருந்தாலும், பெண்களின் பிரியமே அதிகமாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த, அவர்களுடைய உணர்வுகளில் கலந்த ஒன்றாக நகைகள் மாறிவிட்டன.
  • பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விதவிதமான நகைகளை அணிந்து பிறரைக் கவர்கின்றனர். சிலருக்கு பாரம்பரிய நகைகள் பிடிக்கும், சிலருக்கு பேஷன் நகைகள் பிடிக்கும், இன்னும் சிலருக்கு மரம், கண்ணாடி, சணல், பேப்பர் போன்றவற்றில் தயாரான நகைகள் பிடிக்கும்.
  • எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான நகைகளையே அணிந்து செல்ல வேண்டும் என்றதொரு வரைமுறைம் உள்ளது. இந்த வரைமுறை மாறும்போது அல்லது மீறப்படும்போது அது பிறரை ரசிக்க வைப்பதற்கு மாறாக முகம் சுளிக்க வைக்கும். குறிப்பாக உடைகளுக்கு பொருந்தும் நகைகளையே அணிய வேண்டும். உதாரணமாக பட்டுபுடவை கட்டினால் அதற்கு பொருத்தமான நெக்லஸ், ஆரம், முத்துமாலை போன்றவற்றை அணியலாம். அப்படி இல்லாமல் பட்டுபுடவை கட்டி மெல்லிய செயின், மரம், கண்ணாடிகளால் ஆன நகைகளை அணிந்து கொடால் பார்க்க சிறப்பாக இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக