இளநீர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்
இளநீரை தினமும் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.மேலும் ஹைப்பர் டென்சன் எனப்படும் மன அழுத்தத்தை குறைத்து இதயத்தில் பாதிப்பு ஏற்படாமல் காக்கும். இதனால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இளநீரை தினமும் குடித்து வரலாம்.

இளநீரில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாது.இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் இளநீரை தினமும் குடித்து வரலாம். மேலும் சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது உடலில் உள்ள சத்துக்கள் எல்லாம் இழந்து விடும். அப்போது இளநீர் குடித்தால் வயிற்றுப்போக்கு சரியாகும்.

இளநீரில் அதிக அளவு எல் ஆர்ஜினைன் உள்ளதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இளநீரை பருகி குடித்து வரலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக