புதன், 8 ஏப்ரல், 2020

உங்கள் உடல் வடிவம் என்ன...? எந்தெந்த வடிவத்திற்கு என்னென்ன ஆடை அணியலாம் என்று தெரியுமா உங்களுக்கு..?

உங்கள் உடல் வடிவம் என்ன...? எந்தெந்த வடிவத்திற்கு என்னென்ன ஆடை அணியலாம் என்று தெரியுமா உங்களுக்கு..?


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடலமைப்பு இருக்கும்.அவரவர் உடல் அமைப்பிற்கு ஏற்ப உடை அணிந்தால் எந்த உடல் அமைப்பை கொண்டிருந்தாலும் அது பொருத்தமாய் இருக்கும் என்கின்றனர் ஆடை அலங்கார நிபுணர்கள். உங்கள் உடல் எந்த வடிவத்தைக் கொண்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் உடை அணிந்து உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேருங்கள்.
சிலர் ஆப்பிள் வடிவத்தில் இருப்பார்கள், சிலர் பேரிக்காய் போல இருப்பார்கள் சிலர், வாழைப்பழ வடிவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். சிலரோ உடுக்கை இடையோடு மணல் கடிகாரம் போல இருப்பார்கள், சிலர் உருண்டையாய் அனைத்து அவையங்களும் உருண்டு திரண்டு குண்டு பூசணிக்காய் போல இருப்பார்கள்.எந்தெந்த வடிவத்திற்கு என்னென்ன ஆடை அணியலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆப்பிள் வடிவம்
உடலின் மேற்புறம் அகன்றும் இடுப்பிற்குக் கீழே வரவர சிறுத்தும் ஷேப் கொண்ட பெண்கள் ஆப்பிள் வடிவம் கொண்டவர்கள். இந்த உடல் அமைப்புக் கொண்டவர்கள் பொதுவாக டார்க் கலர் டாப்ஸ், லைட் கலர் பாட்டம் அணியலாம். கீழ்பகுதி உடம்பின் குறுகிய தன்மை மறைக்கப்பட்டு அழகாகத் தோற்றமளிப்பார்கள். இவர்கள் அந்தக் குறையை ஈடுகட்ட அவர்கள் அணியும் டாப்ஸ் மேலே சிறியதாகவும் கீழே சற்றே அகலமாகவும் வருமாறு A ஷேப்பில் கட் செய்து தைக்கவேண்டும். பாட்டம் உடையும் அகலாமாக தைக்கப்பட்டிருந்தால் உடை பொருத்தமாய் அழகாய் இருக்கும்.
வாழைப்பழ வடிவம்
ஒரே நீளமான உடல்வாகு கொண்டவர்கள் என்பதால் பெண்மைக்குரிய வடிவங்களை எடுத்துக் காட்டும் விதத்தில் இவர்கள் உடை அணியவேண்டும். அனார்கலி டைப் டாப்கள் இவர்களுக்குப் பொருத்தமானவை. ஷேப் வைத்து தைத்த ஜாக்கெட்டுகள், காக்டெயில் டிரெஸ்கள் பொருந்தும்.
மணல்கடிகாரம் ( ஹவர் கிளாஸ்) வடிவம்
உடல் அமைப்பு என்றால் இது பெர்பெக்ட் அமைப்பு என்பார்கள். மேற்பகுதியும், கீழ்பகுதியும் சரியான அகலத்தில் இருக்கும். அதேசமயம் இடுப்புப் பிரதேசம் உடுக்கைப் போலக் குறுகி இருக்கும். இந்த உடல்வாகு கொண்டவர்கள் சுடிதார், சேலை, மேற்கத்திய ஆடைகள் இப்படி எந்த மாதிரியான உடைகளை அணிந்தாலும் அவர்களுக்குப் பொருத்தமாய், அழகாய் இருக்கும்.
பேரிக்காய் வடிவம்
உடலின் மேற்பகுதி குறுகலாகவும், கீழ் பகுதி அகன்றும் காணப்படும் இந்த உடல் அமைப்பினரை பேரிக்காய் வடிவ அமைப்பினர் என்று கூறுவார்கள். இவர்கள் லைட் கலர் டாப், டார்க் கலர் பாட்டம் அணிவது கூடுதல் கவர்ச்சி தரும். மேலும் கவர்ச்சிகரமான அலங்காரக் கழுத்துக் கொண்ட ஆடைகளை அணியலாம். கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள் வைத்து தைத்த ரூசிங் டைப், போட் நெக், மடிப்புகள், பிரில்கள் வைத்து டிசைன் செய்த ஆடைகளை அணியலாம். அதேபோல் மேலேயிருந்து ஒரே நீளமாக வராமல் எம்பயர் வெய்ஸ்ட் டைப்பில் உடை அணிந்தால் பெரிய பின்பகுதி அடுத்தவர்களின் கண்களை உறுத்தாமல் இருக்கும்.
உருண்டை வடிவம்
உடல் பருமனால் உருண்டு திரண்டு பூசணிக்காய் வடிவத்தில் இருப்பார்கள். இன்றைக்குப் பெரும்பாலான பெண்கள் இந்த வடிவத்திற்கு மாறிவிட்டனர். இவர்கள் தங்களின் உடலை மறைப்பதற்காக இழுத்துப் போர்த்திக்கொண்டு இன்னும் அதிகப்படியான குண்டாகக் காட்டிக்கொள்வார்கள். இந்த உடல் அமைப்பைக் கொண்ட பெண்கள் லைட் வெயிட் சேலைகளைக் கட்டலாம். ஷிபான் சேலைகளை உடலை கொஞ்சம் ஒல்லியாகக் காட்டும். மாடர்ன் உடைகள் என்றால் பெருத்த இடையும், பின்புறமும் மறைக்கும் வகையில் பிரில் வைத்த எம்பயர் டைப் மாடல் உடைகள் பொருத்தமா இருக்கும்.
இன்னும் என்னங்க யோசிக்கிறீங்க, உங்க வடிவத்துக்கு ஏற்ற மாதிரி ஆடையை தேர்ந்தெடுங்க, அழகை கூட்டுங்க, அப்புறம் என்ன நீங்கதான் அழகுராணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக