வானவில் எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா??? படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!!
ஆதியிலே இந்த வானமும் பூமியும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது என்று வேதத்தின் மூலம் அறிய முடிகிறது. மனிதர்களான ஆதாம், ஏவாள் ஆகிய இருவரையும் சிருஷ்டித்து அல்லது உண்டாக்கி பூமியில் வாழும்படி செய்தார். மனிதனுக்கு எது நன்மை, எது தீமை என்றும் கற்றுக்கொடுத்தார். ஆனால் ஆதாம், ஏவாளின் சந்ததிகளாகிய மற்றவர்கள் அனைவரும் பாவம் செய்தார்கள். தேவன் வானத்திலிருந்து மனிதர்களை பார்க்க அனைவரும் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டவர்களாக காணப்பட்டார்கள். நன்மை செய்கிறவர்கள் ஒருவனாகிலும் இல்லை. ஆனபடியால் இந்த மனிதர்களை பூமியில் உண்டாக்கினதற்கா மனதஸ்தாபப் பட்டார். இவர்களை நான் ஏன் உண்டாக்கினேன் என்றார்.... (ஆதி. 6:6)
பூமியின் மனிதர்கள் அனைவரும் பாவிகளாய் இருந்தபடியால் அவர்களையும், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் யாவையும் அழிக்க முடிவெடுத்தார். அந்த நாட்களில் நோவா என்ற ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் தேவனின் அனைத்து வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிந்து, தேவனுடைய பார்வையில் பாவம் செய்யாத நீதிமானாயிருந்தான். அவன் தினந்தோறும் தேவனோடு பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் மற்றும் இந்த மகன்களுடைய மனைவிகள் இருந்தனர்.
தேவன் நோவாவோடு பேசினார். பூமியில் மனிதர்களின் பாவம் பெருகியது நான் இவர்களை மழையினால் அழிக்கப்போகிறேன். ஆகையால் நீ ஒரு பேழையை (கப்பலை) உண்டாக்கு என்றார்.
நோவா தேவன் சொன்னபடியே செய்தான். தேவன் நோவாவை நோக்கி, பேழையில் நீயும் உன் மகன்கள், அவர்களின் மனைவிகள் யாவரும், மிருகங்கள், பறவைகள் என அனைத்திலும் ஜோடி ஜோடியாக உள்ள போகும்படி செய் என்றார். அவர்கள் அதற்குள் போன பிறகு கப்பலின் கதவை தேவனே அடைத்தார். பிறகு நாற்பது நாள் இரவும், பகலும் மழை பெய்தது. கப்பலில் இருந்தவர்கள் தவிர பூமியில் உள்ள அனைவரும் இறந்து போனார்கள்.
மழை நின்ற பிறகு 150 நாள் கழித்து, தண்ணீர் பூமியில் வற்றியது. நோவா மற்றும் அவனுடைய மகன்கள் மற்றும் அவனுடைய மனைவிகள் யாவரும் கப்பலில் இருந்து வெளியே வந்தார்கள். தேவன் அவர்களிடம் "இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகுறேன் என்றார்". ஆதி 9:11
"நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாய் இருக்கும்". "நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும்". (ஆதி.9:13-16) அப்பொழுது நான் உங்களை அழிக்க மாட்டேன் என்று கூறியதை நினைவு கூறுவேன் என்றார்.அதனால் தான் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது வானவில் வருகிறது. இப்படி தான் வானவில் தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக