புதன், 8 ஏப்ரல், 2020

பூவரச இலையில் பீப்பி.. சிம்னி விளக்கு.. 80s.. 90s.. வாழ்க்கை ரகசியம்..!! மலரும் நினைவுகள்..!!


பூவரச இலையில் பீப்பி.. சிம்னி விளக்கு.. 80s.. 90s.. வாழ்க்கை ரகசியம்..!!
மலரும் நினைவுகள்..!!


👉 80களில், 90களில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான்... ஏன் தெரியுமா? ஏனென்றால் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்தான்.

👉அதாவது, அன்றைய வீடியோ கேம்-ல் தொடங்கி இன்றைய பிளே ஸ்டேஷன் வரை அனைத்தையும் முதலில் உபயோகப்படுத்தியது இவர்கள்தான்.

👉அன்று தங்கள் பெற்றோர்கள் ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலே அதை வைத்து பள்ளி காலங்களில் அதிகபட்ச சந்தோஷத்தை வாங்கியவர்களுக்கு அந்த காலம் மறக்க முடியாத சொர்க்கம் என்றால் அது மிகையாகாது.

👉சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.

80ள...இ 90ள மனைள... அந்த நாள் ஞாபகம் வந்ததே!!

👉கேட்டில் ஏறி நின்று கொண்டு அதை ஒற்றைக் காலால் திறந்தும், மூடியும் விளையாடிய கடைசி தலைமுறை.

👉கொய்யா மரத்தில் ஏறி அணில், கிளி கடித்த பழங்களை சாப்பிட்ட கடைசி தலைமுறை.

👉தமிழ் சினிமா பாடல் வரிகள் சிறு சிறு புத்தகங்களாய் கிடைக்கும். அதை வாங்கி போட்டி போட்டு படித்த சூப்பர் சிங்கர்கள் அல்லவா? நாம்.

👉பூவரச இலையில் பீப்பி செய்து இசை வாசித்த கடைசி தலைமுறை.

👉தட்டான், முயல் பிடிக்க காடுகளில் அலைந்த கடைசி தலைமுறை.

👉ஆசை ஆசையாக கடிதம் எழுதியதும், அதை பல காலம் பாதுகாப்பாகச் சேர்த்து வைத்திருந்ததும் நம் தலைமுறை தான்.

👉சிம்னி விளக்கு பயன்படுத்திய கடைசி தலைமுறை.

👉ஊருக்குள் வரும் கரடி, குரங்குகளை பார்த்து முதலில் பயந்தாலும், பிறகு அதனை பின்தொடர்ந்து போக்கு காட்டிய கடைசி தலைமுறை.

👉வைக்கோல் போர்களில் துள்ளிக்குதித்து பிறகு எரிச்சல் தாங்க முடியாமல் தள்ளாடிய கடைசி தலைமுறை.

இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக