புதன், 8 ஏப்ரல், 2020

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’


  • மாயத்­தோற்­றங்­களை ஏற்­படுத்தும் சில புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது இணை­யத்தில் பரவி வரு­வ­துண்டு. தற்­போது ஒரு இளம் ஜோடி பரஸ்­பரம் அர­வ­ணைத்­துக்­கொண்ட நிலையில் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று இவ்­வாறு பர­வி­யுள்­ளது.
  • மேலோட்­ட­மாகப் பார்ப்­ப­தற்கு இது சாதா­ரண ஒரு படம். இப்­ப­டத்தில், கடற்­க­ரை­யொன்றில் கெம­ரா­வுக்கு முதுகைக் காட்­டிக்­கொண்டு இருக்கும் ஓர் இளை­ஞரை யுவதி ஒருவர் இடுப்­புடன் சேர்த்து அர­வ­ணைத்­த­வாறு காணப்­ப­டு­கிறார். ஆனால், இப்­ப­டத்தின் கீழ்­ப்ப­கு­தியை நன்கு அவ­தா­னித்தால் நாம் காண்­பது என்ன என்­பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்­படும்.
  • இந்த இளைஞன், யுவதி ஆகிய இரு­வரின் கால்கள், பாதங்கள் காணப்­படும் நிலையே இந்த குழப்­பத்­துக்கு காரணம். புரி­யாத புதி­ராகக் கரு­தப்­பட்ட இப்­படம் “பிளட் ரீப்பர்” என்­ப­வரால் இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­ட­வுடன் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பல மில்­லியன் தட­வைகள் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது.
  • இப்­படி படம்­பி­டிக்­கப்­பட்­டி­ருக்க வாய்ப்­பில்லை எனவும் இது கிறபிக்ஸ் வேலை­யாக இருக்­கலாம் எனவும் சிலர் கரு­தலாம். இது கிறபிக்ஸ் அல்ல. உண்­மை­யான புகைப்­ப­டமே எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக