சனி, 25 ஏப்ரல், 2020

லாக்-டவுனில் செம ஐடியா😍 முயற்சி செய்துதான் பார்க்கலாமே🤔 வீட்டுக்கு வீடு🏠🌱 வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம்..!!



லாக்-டவுனில் செம ஐடியா😍 முயற்சி செய்துதான் பார்க்கலாமே🤔 வீட்டுக்கு வீடு🏠🌱
வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம்..!!

👉தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் கொரோனா. கொரோனாவை தடுக்கவும், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கவும் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.

👉ஊரடங்கில் வீட்டில் பொழுதை எப்படி கழிப்பது என்று தெரியவில்லையா? நமக்கு கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் காய்கறி தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்கலாமே!!

👉வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் தேவையானபோது காய்கறிகளை தோட்டத்தில் இருந்து பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். இது நம் அத்தியாவசிய செலவுகளை குறைத்து, நமக்கு லாபத்தையும் பெற்று தரும்.

லாக்-டவுனில் செம ஐடியா...!!

முயற்சி செய்துதான் பார்க்கலாமே...!!
இந்த லாக்-டவுன் நேரத்தில் நீங்களும் காய்கறி தோட்டம் அமைக்க ரெடி ஆகிட்டிங்களா..!!

🌿முதலில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். மாடியில் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் மண் நிரப்புவதற்கான தொட்டிகளிலோ அல்லது சாக்கு பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.

🍀மாடித்தோட்டத்தில் செடி வைப்பதற்கு தேவையான மண்ணை உங்கள் நண்பரின் தோட்டத்திலோ அல்லது உங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலோ இருந்து சேகரித்து கொள்ளலாம். பின்னர் தோட்டத்தை எளிதாக அமைத்துவிடலாம்.

🌴அதென்ன இவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள் என கேட்கிறீர்களா? நிஜம்தான்..!

🌱செடி வளர்ப்பதற்கு தேவையான இடம், மண், நீர், விதை மட்டும் இருந்தாலே போதுமானது. பின்னர் செடி வளரும்போது அதற்கு தேவையான இயற்கை உரங்களை நாமே தயார் செய்து அளித்துவிடலாம்.

🌿கீரை வகைகளை விளைவிக்க 1ஃ2 அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதுமானது. செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல் மண் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

🍀கொடி வகைகளுக்கு 3 அடிக்கு மேலாக இருக்கும்படி பைகளில் மண்ணை எடுத்துக்கொள்ளவும்.

🍃மண் போடும்போது அதோடு சம அளவு இயற்கையாக மக்கும் குப்பைகள் எதுவாயினும் மண்ணுடன் சேர்த்து கொள்ளலாம்.

🍀குப்பைகளையும், மண்ணையும் நன்கு கலந்து பைகளில் இடவேண்டும். குப்பைகளுக்காக நீங்கள் எங்கும் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை.

🌾உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளிலேயே மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின் முன் உதிர்ந்துள்ள மர இலைகள் என எதுவாயினும் உபயோகித்து கொள்ளலாம்.

🌴முதலில் நீங்கள் மண்ணை இடும்போது கால்நடைகளின் சாணம் கிடைத்தால் சேர்த்து கொள்ளலாம். அது செடிகளுக்கு நல்ல உரமாக இருக்கும்.

🍃பின் நீங்கள் சேகரித்து வைத்துள்ள காய்கறி விதைகளை மண்ணில் ஊன்றி காலை, மாலை என தண்ணீர் ஊற்றி வளர்த்தால் போதும்!

🍀அதன்பின் இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்துவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உங்கள் வீடுகளில், உங்கள் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கீரை கூட்டாகவும், வெண்டைக்காய், புடலங்காய் குழம்பாகவும், தக்காளி பச்சடியாகவும் மணமணக்கும்.

🌿தினமும் காலையில் எழுந்ததும் செடிகளை கண்டு அதனுடன் சிறிது நேரம் உறவாடுங்கள். இதனால் செடிகள் நன்றாக வளர்வதுடன் நம் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக