புதன், 8 ஏப்ரல், 2020

கெட்ட வார்த்தை ஏன் பேசக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்

கெட்ட வார்த்தை ஏன் பேசக்கூடாது? தெரிந்து கொள்ளுங்கள்


கெட்ட வார்த்தை பேசினால் தான் தனி ஒரு மரியாதை என நம்பி பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் கெட்ட வார்த்தைபேசாமல் இருந்தாளும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வின் விளைவாக நாம் பேச தூண்டப்படுகிறோம். சூழ்நிலையாலும் நண்பர்களாலும் எளிதில் ரகசியமாக மற்றவர்களிடமிருந்து கெட்ட வார்த்தைகளை பழகிக் கொள்கிறோம். ஆனால் அதை பேசலாம் என ஒரு தரப்பும்,பேசக்கூடாது என மற்றொரு தரப்பும் கூறுகின்றனர். எது சரி என ஒரு கதை மூலம் பார்க்கலாம்.
ஒரு பள்ளியில் ஐந்து மாணவர்கள் ஆசிரியரிடம் பாடம் கற்று வந்தனர். ஒரு சமயம் ஆசிரியர் தன் மாணவர்களுடன் அமர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நல்ல வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என பாடம் கற்பித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவர் எழுந்து குருவே
"நெருப்பு என்றால் சுடவா போகிறது"
என்றான்.
அதற்கு ஆசிரியர் " அட முட்டாளே என்ன கேள்வி கேட்கிறாய்" என்றார். உடனே மாணவன் கோபப்பட்டு தன் வாயில் வந்த வார்த்தைகள் எல்லாம் கொட்டினான். உடனே ஆசிரியர் "என்னை மன்னித்து விடு" என்றார். உடனே மாணவனும் அமைதியானான். நான் உன்னை தவறான வார்த்தைகளால் பேசியதும் நீ ஏன் கோபம் கொண்டாய். பின்பு நல்ல வார்த்தைகளால் பேசவும் ஏன் அமைதி ஆனாய்" இதுவே வார்த்தைகளின் சக்தி என்றார்.

தீய வார்த்தைகள் பேசுவது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை சமாளிப்பது கடினம். அது போல இந்த செய்தியை படிக்கும் நீங்களும் இனி தீய வார்த்தைகளை பேச மாட்டீங்க என்று நம்புகிறோம்.
இதுபோன்ற சுவாரசியமன செய்தி தொகுப்புகளை காண நமது ப்ளாக்கரை பின்தொடருங்கள் மற்றும் லைக் செய்யுங்கள் மறக்காம உங்கள் கருத்துக்களை கீழே தெரியப்படுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக