லட்சுமிக்கு பிடித்த மரம்!
செல்வம் சேர லட்சுமியை வழிபட வேண்டும். லட்சுமி வீட்டில் குடியேற தினமும் லட்சுமியை வணங்கி வர வேண்டும். அஷ்டலட்சுமிகளை அள்ளி தரும் லட்சுமிக்கு இரண்டு மரங்கள் பிடிக்கும். வில்வம் சிவனுக்கு மட்டும் உகந்ததல்ல. லட்சுமிக்கும் உகந்த மரமாகும்.
🌟 வில்வ மரம்
லட்சுமிக்கு பிரியமான மரம் வில்வ மரம். லட்சுமி வில்வமரத் தோப்பிலே தவம் புரிந்தாள். வாமனபுராணத்தில் வில்வமரம் ஸ்ரீலட்சுமியின் கைகளிலிருந்து உதித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
🌟 நெல்லி மரம்
நெல்லி மரத்தை வழிபடுபவர்களுக்கு குபேர செல்வம் உண்டாகும். நெல்லிக்கனியை ஹரிபலம் என்றும் அழைப்பர். நெல்லி மரம் இருக்கும் வீட்டில் லட்சுமி குடியேறுவாள். வீட்டில் நெல்லி மரம் வைத்திருப்பவர்கள் அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து தெய்வமாக வழிபட வேண்டும்.
இந்த இரண்டு மரங்களையும் வழிப்பட்டால் லட்சுமியை வணங்கிய பலன் கிடைக்கும். வில்வம் மற்றும் நெல்லி மரத்தை வழிப்பட்டு லட்சுமி மற்றும் குபேரனின் செல்வத்தைப் பெற்று மகிழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக