வியாழன், 13 அக்டோபர், 2016

பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது

பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது.

ஒரு ஊரில், கணவர்கள்விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........*அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..*1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.*2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.*3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....*இது தான் அந்த விதிமுறைகள்....**இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..*"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...*முதல் தளம் அறிக்கை பலகையில்,*>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<*"வேலை உள்ளவர்கள்"."கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".*இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...**இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,*>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<*"வேலை உள்ளவர்கள்"."கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"மேலும்"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"*இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...**மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.*>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<*"வேலை உள்ளவர்கள்""கடவுள் நம்பிக்கை உளளவர்கள்""குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"மற்றும்"வசீகரமானவர்கள்"*அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவதுதளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்றுநினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....**நாலாவது தளம் அறிக்கை பலகையில்,*>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<*"வேலை உள்ளவர்கள்""கடவுள் நம்பிக்கை உளளவர்கள்""குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்""வசீகரமானவர்கள்"மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்குஉதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"*இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?*கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...**ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,*>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<*"வேலை உள்ளவர்கள்""கடவுள் நம்பிக்கை உளளவர்கள்""குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்""வசீகரமானவர்கள்""வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"மற்றும்"மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"**அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..*சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???*சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....**
*ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,*""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம்,🙊பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது  என்பதை நிரூபிக்கத்தான்"".....
*"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!*" கீழே படிகளில் இறங்கவும்".என்று எழுதியிருந்தது...***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக