திங்கள், 10 அக்டோபர், 2016

108-ம் அதன் சிறப்புக்களும்


108-ம் அதன் சிறப்புக்களும்
*********************************

108ன் சிறப்பு தெரியுமா? அவற்றை பார்ப்போம்

படைத்த கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள்.

பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோ
ம்அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.

* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.

* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும்
சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத் தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத் தைப் போல 108
மடங்கு.

* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்

* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.

* சூரியனின் விட்டம் பூ மியில் விட்டத்தைப்.போ ல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே
எண் ணிக் கையில் பல விஷயங்களும்
அமைகின்றன.

* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக.நட்சத்திரங்கள்.

* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின்.எண்ணிக் கை 108

* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது.வருடம் 108 மணி ஓசைகளால்
வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள.வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள்.உள்ளதாக புத்த மதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.

* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன்.கோவிலில் 108 சிவசந்நிதிகள்.

* உடலில் 108 மர்ம ஸ்தா னங்கள் என வர்மக்கலை கூறு கிறது.

* குங்ஃபூ கலை உடலில் 108 அழு
த்தப்புள்ளிகள் இருப்பதாகக் கூறு கிறது.

* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட் டுள்ளன.

* சீக்கிய குருமார்கள் 108 முடிச் சுகள் உள்ள கம்பளி ஜப மாலை யையே பயன்படுத்துவா
ர்கள்.

* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவ தாக தந்திர சாஸ்திரம் கூறு கிறது.

108 என்பது வரையறைக்கு ட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலை யை
உணர்த்துகிறது.

“1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் “0 என் பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழு மை
யையும், 8 என்பது எட் டுத் திக்குகளிலும்
உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.

ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது 27
மணிகள் கொண்ட மாலைகளும் உண் டு. இந்த
எண்ணிக்கை களைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).

நம்முடைய வழி பாடுகளில்,நாம் பயன்படுத்தும் பூஜை பொருட்களெல்லாம் ஒற்றை படையில் இருக்கும்.குத்து விளக்கு இரண்டு,வாழைமரம் கட்டும்போது இருபுறமும் இரண்டு வைப்பார்கள்.ஆனால் சுவாமி படங்கள் ஒற்றை படையில்தான் இருக்கும்.

மாவிலை தோரணங்கள் கட்டப்படும்போது ஒற்றை ப்படை இலைகளாக வைத்துதான் கட்டுவார்கள்.மந்திர சாஸ்திரத்தில் இந்த எண்ணிக்கைகள் 108க்கும் 1008க்கும் மகத்தான மகிமை இருக்கிறது.இந்த 108 முறை மந்திரம் சொல்லப்படும் வேளையில் மந்திர அதிர்வுகளின் சாஸ்வதம்,நாம் இழுக்கின்ற மூச்சுக் காற்றில் கலந்துள்ள பிராணவாயுவோடு சேர்ந்து, இரத்தத்தோடு கலந்து விடுகிறது.

அந்த மந்திரங்களை முழு மையான எண்ணிக்கையில் கூறி பூர்த்தி செய்யும்போது,நம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை அடைந்து,மந்திர அதிர்வுகளையும் உள்வாங்கி ரத்தத்துடன் உடலின் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது என்று மெய்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.27 நட்சத்திரங்களையும்,ஒரு நாளின், நான்கு பாதங்களையும் கணக்கிட்டால் வருகின்ற எண்ணிக்கை 108 ஆகும்.அதோடு இந்த பிரபஞ்சமே ஒரு வட்டப்பாதை என்று சொல்லப்படுகிறது.ஒரு ராசி மண்டலம் என்பது 30 பாகையை கொண்டது.12 ராசி மண்டலங்கள் 360 பாகையைக் கொண்டது.நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து இந்த 360 பாகை சுழற்சியை பூர்த்தி செய்கிறது.இந்த உள் அர்த்தத்தை வைத்துதான் நாம் மந்திரங்களை 108 முறை ஜபிக்கிறோம்.

ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து, புலனைந்து பருவுடல் நுன்னுடல் அறிவுடல் என்னும் உடல்கள் மூன்று ஆக மொத்தம் பதினெட்டு. இந்த பதினெட்டையும் ஒவ்வொரு ஆதாரமாக ஜபித்து கடக்க வேண்டும். ஆதாரங்கள் ஆறு. முதலில் மூலாதாரம் மண் தத்துவம் விநாயகர் அடுத்தது ஸ்வாதிஷ்டானம் நீர் தத்துவம் பிரம்மா, மூன்றாவது மணிப்பூரகம் என்னும் அக்னி தத்துவம் மகாவிஷ்ணு, நான்காவது அநாகதம் வாயு தத்துவம் ருத்ரன், ஐந்தாவது ஆகாய தத்துவம் கண்டம் மகேஸ்வரன், ஆறாவதாக சுழிமுனை நுன் ஆகாயம் என்ற தத்துவம் சதாசிவம். இவ்வாறாக 108 முறை ஜபிக்கும் போது மனம் என்னும் திரை விலகி ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும். அதேசமயம் மந்திரம் உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும் காரணம் புறத்தில் ஜபிக்க பிராணன் விரயமாகிறது. மனமும் உள்ளே ஒடுங்காது சந்தோஷம்.

நாம் தெரிந்து கொள்ளவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக