#ரிஷிகளின்_கோத்ரம்:-
***************************
நாம் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது அர்ச்சகர் நமது பெயர், இராசி, நட்சத்திரம், கோத்ரம் கேட்பார். ஆனால் சிலர் கோத்ரம் தெரியாமல் விழிப்பர். மற்ற சிலரோ அவரவர் வழிபடும் தெய்வத்தை வைத்து கோத்ரம் சொல்வர், அதாவது சிவனை வழிபடுபவர்கள் 'சிவ' கோத்ரம் என்றும், விஷ்ணுவை வழிபடுபவர்கள் 'விஷ்ணு' கோத்ரம் என்றும் சொல்வார்கள்.
இவை முற்றிலும் முரண் பட்டதாகும். ஏன் னெனில், ஒரு உயிர் தோன்றும்
போது ஒரு நட்சத்திரத்தின் பெயரில் தான் தோன்றுகின்றது. அந்த அடிப்படையில் மனித உயிர்கள் அனைத்தும் இந்த 27 நட்சத்திரங்களுக்குள் தான் எப்படியும் பிறந்தாக வேண்டும். அதுபோன்று அவன் இறக்கும் போதும் வானத்தில் இருந்து அந்த நட்சத்திரம் கீழே விழும் காட்சியையும் நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
அதன் படி இந்த 27 நட்சத்திரங்களுக்கும் பல ரிஷிகளின் பெயர்
சூட்டப்பட்டுள்ளது. அந்த ரிஷிகளின் பெயரிலேயே கோத்ரம் உருவாக்கப் பட்டுள்ளது. கீழ்கண்ட கோத்தர விவரம் புதன் நாடியில் 7 ரிஷிகளின் பெயரில் கோத்ரம் பிரிக்கப்பட்டுள்ளது.
1) காஸ்யப கோத்ரம்:-
- அஸ்வினி -பரணி -கார்த்திகை - ரோஹிணி
2)அத்தரி கோத்ரம்:-
- மிருகசிரிடம் - திருவாதிரை -புனர்பூசம்
- பூசம்
3)பாரத்வாஜ கோத்ரம்:-
- ஆயில்யம் -மகம் -பூரம் -உத்திரம்
4)விஸ்வாமித்திர கோத்ரம் :-
- அஸ்தம் - சித்திரை -சுவாதி-விசாகம்
5)கௌதம கோத்ரம்:-
- அனுஷம் -கேட்டை-மூலம் -பூராடம்
6)ஜமத்கனி கோத்ரம்:-
- உத்திராடம் -திருவோணம் - அவிட்டம்
7)வசிஷ்டர் கோத்ரம்:-
- சதயம் -பூரட்டாதி -உத்திரட்டாதி -ரேவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக