ஐந்து நாள் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி தெரியுமா?
தீபாவளி என்பது நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும். இந்தியர்கள் மட்டுமின்றி உலகமே இணைந்து கொண்டாடும் ஒரு சிறப்பான நாள் தான் தீபாவளி திருநாள்.
💣 இந்தியாவில் இந்த நாளை ஒரு நாள் மட்டும் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்தியாவின் வட பகுதியில் இந்த நாளை ஐந்து நாள் கொண்டாடுகின்றனர்.
💣 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புஜைகளும், வழிபாடுகளும் நடத்தி ஐந்து நாட்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
💣 தீபாவளியின் முதல் நாளன்று, பசுமாடு வழிப்பாடு நடத்தப்படுகிறது. நிராசை அடைந்து மறைந்த வேனா அரசரின் புதல்வனான ப்ரித்து அரசன், தன் தந்தையின் தவறான ஆட்சிக்கு ஈடு செய்யும் வகையில் பசுவாக குறிக்கப்படும் கடவுளிடம் ஆசீர்வாதம் பெறுமாறு புமியில் இருந்து கோரினான் என புராணம் கூறுகிறது.
💥 இரண்டாம் நாள் தான் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதியில் முதல் நாள் தீபாவளியாகும். இந்த நாளை தன்டேராஸ் என கூறுவார்கள். தங்கம் மற்றும் பிற வடிவில் சொத்து வாங்க இந்த நாள் மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது.
💥 மூன்றாவது நாளை, நரக சதுர்தசி என அழைப்பார்கள். இது நரகாசுரனின் அழிவை குறிப்பதாகும். தீய சக்தியை நல்ல சக்தி அழித்ததை இந்த நாள் குறிக்கும்.
🎉 நான்காவது நாளன்று லக்ஷ்மி தேவி வழிபாடு செய்யப்படும். லக்ஷ்மி தேவியை வீட்டிற்கு வரவேற்க வீட்டில் விளக்குகள் ஏற்றப்படும்.
🎉 ஐந்தாவது நாளை கோவர்தன் புஜை என்று அழைப்பார்கள். தன் சக மனிதர்களை வெள்ளத்தில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்ற கோவர்தன மலையை கிருஷ்ண பரமாத்மா தூக்கியத்தைக் குறிப்பதே இந்த நாளாகும்.
🎉 தீபாவளி திருநாளில் புஜைகளும், வழிபாடுகளும் செய்து தீப திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக