சுரியனை ஏன் வணங்க வேண்டும்?
காலையில் எழுந்ததும் சுரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சுரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சுரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சுரியன்.
🌅 இன்னும் பலவிதமாக சுரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சுரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?
🌅 மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.
🌅 சுரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சுரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை புமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சுரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.
🌅 சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சுரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.
🌅 கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சுரியனை வழிபடுகின்றனர்.
🌅 சுரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சுரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக