ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு

சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வழிபாடு

சரஸ்வதி
பூஜையன்று ‌வீடுகளிலும், அலுவலகங்களிலும்
பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.
அவ்வாறு வழிபாடு செய்வதற்கு முன்பு,
வழிபடும் இடத்தை தூய்மைப் படுத்த வேண்டும்.
சந்தனம், தெளித்து குங்குமம் இட
வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும்,
படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும்
சந்தனம் தெளித்து குங்குமம் இடவும்.
படத்திற்கு பூ ‌க்கள் வைத்து அலங்கரிக்க
வேண்டும். அன்னையின் பார்வையில் புத்தக
ங்களை வைத்து அதன் முன்பாக வாழையிலை
விரித்து அதில் படையலுக்காக
சமைக்கப்பட்டவைகளை வைக்க வேண்டும். சுண்டல்,
சர்க்கரைப் பொங்கல், புளியோதரை,
எலுமிச்சை சாதம் போன்றவற்றை கலைவாணிக்கு
நைவேத்தியங்களாகப் படைக்கலாம். வாழை
இலையை வைத்து அதில் பொறி, கடலை,
அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க
வேண்டும். செம்பருத்தி, ரோஜா,
வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு
உகந்த மலர்களாகும். இவற்றால்
மாலைகள் தொடுத்து அன்னைக்கும்,
அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும்
அணிவித்தல் வேண்டும். எதற்கும் விநாயகரே
முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார்
பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய
பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல்
வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும்
கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து
அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச்
செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன்
கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள
குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும்
கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி
வணங்கலாம். நவராத்திரி நாட்களில்
அன்னையின் அருள்பெற ஒன்பது
நாட்களும் விரதமிருந்து பூஜிக்க
இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும்
அம்மனை பூஜித்து வணங்கினால் போதும்.
அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும்
என்பது நம்பிக்கை.
ஆயுத பூஜை: ஆயுதம் என்பதன் உண்மையான
பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை
கொண்டாடப்படுகிறது. வாழ்வில்
நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும்
விதம் அவற்றையும் இறைபொருளாகப்
பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத
பூஜையன்று சிறிய கரண்டி முதல்
தொழில் இயந்திரங்கள் வரை எல்லா
வகை தொழில் உபகரணங்களையும்
கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில்
வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு
வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு
கொடுப்பதும், பிறகு எடுத்து
தொழிலுக்குப் பயன்படுத்துவதும்
ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும். ஆயுத
பூஜையன்று எல்லா ஆக்கப்பூ ர்வமான
காரியங்களுக்கு மட்டுமே இந்த
உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம்,
மற்ற அழிவு செய்கைகளுக்கு
பயபடுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக்
கொள்வோமே. விஜய தசமியன்று
புதிதாகத் தொழில்
தொடங்குவோர், கல்வி பயில
ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல்
மேன்மை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக