சனி, 8 அக்டோபர், 2016

கோ பூஜை, கோதானத்தின் மகிமை

கோ பூஜை, கோதானத்தின் மகிமை
-----------------------------------------------------
பகவான் ஸ்ரீ விஷ்ணு தன் மனைவி மகாலட்சுமி தேவியை பிரிந்திருக்க மனமில்லாமல் கிருஷ்ண அவதாரத்தில் மன்னனுக்கு பிறந்து இருந்தாலும் பசுக்கள் மேய்க்கும் இடையர் குலத்திலேயே வளர்ந்தார். மகாலட்சுமி தாயாரும் பகவானை பிரிந்திருக்க மனமில்லாததால் தானும் பசுவாக அவதரித்தார்.

ரிஷிகளின் ஆசிரமத்தில் கோசாலை நிச்சயம் அமைந்திருக்கும். பசுவினிடத்தில் அனைத்து தேவர்களும் வாசம் செய்கின்றார்கள்.

கோபூஜை செய்வதால் பித்ரு தோஷம் நீங்கும், பசுவின் காலடி பட்ட மண் நம்மீது படவே நாம் புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும். தூய்மையான பசு கொட்டிலில் தவம் இருந்தால் மந்திர சித்திகள்  கிடைக்கும்.

ஊழ்வினை சாபம் நீங்கவும், வம்ச விருத்தி இல்லாதவர்களும் ( குழந்தை பாக்யம் ), பிரம்மஹத்தி தோஷம் என்னும் கொலை பாவங்கள் தீரவும் கோபூஜையும், கோதானமும் செய்யலாம்.

உங்கள் வீட்டில் எப்பொழுதும் சண்டை சச்சரவுகளாக இருக்கிறதா? வீட்டு சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதா? வீடு களையிளந்து இருக்கிறதா? வீட்டில் நுழைந்தவுடன் துர்நாற்றம் வீசுகிறதா? பணத் தட்டுப்பாடு இருந்துகொண்டே இருக்கிறதா? தேவையற்ற விரய செலவுகள் வந்து வாட்டுகிறதா?  அப்படியென்றால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யவில்லை மாறாக மூதேவியே வாசம் செய்கிறாள்.

இந்த நிலை மாற நீங்கள் உடனே செய்ய வேண்டியது, கோபூஜையும், கோதானமும் தான். கோதானத்தின் மூலம் சகல பாவங்கள்  நீங்கும். வறுமை அகன்று வளமை பெருகும், புத்திர பாக்யம் உண்டாகும். கோதானம் செய்ய இயலாதவர்கள் கோபூஜை செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக