நல்லது... கெட்டது...
ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான், ”நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?’*
*‘குரு சிரித்துக் கொண்டே,”அது அவரவர் விருப்பம், ”என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பாலும் மறுகிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார், ”பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?” என கேட்டார்.. சீடன் விழித்தான்..*
*குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ... அதனை அப்படியே ஏற்கலாம்...*
*சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல தீயவைகளை விலக்கி புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்றார்...*
**********************************
" ஓரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து . . . . . .
இறைவன்
எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்கலோடு வைத்திருக்கிறான் ,ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன் . .
" இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை.. என்று சலித்துக் கொண்டான் . .
மனிதன் 2 : " நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு . .
மனிதன் 1 : " இல்லை " முடியாது . .
மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன்.உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.
மனிதன் 1 : " இல்லை " முடியாது . .
மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு . .
மனிதன் 1 : " நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது . .
மனிதன் 2 : இறைவன் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த நியமத்துகனை தந்துயிருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை... என்று சலிக்கின்றாயே ? ? ?
" எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள் .
" அவன் தான்
இறைவன்
" பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கு உணவு வழங்குபவன் . .
கடலில் உள்ள திமிங்கலதிற்கு ஒரு நாளைக்கு 33 டன் " அதாவது, 36,960 கிலோ " மீன்களை " உணவு வழங்குகிறான் . .
" உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள் , . .
" இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றான் . .
" இன்னும் சிலரை நோய்,நொடிகளால் சோதிக்கின்றான், இன்னும் சிலர்களை கடன் தொல்லைகளால் சோதிக்கின்றான் . .
" ஆக , ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் . .
"நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விடவா சோதனைகுள்ளக்கப்படுகிறார்கள் என்று . .
" இறைவனுக்கு நன்றி செலுத்து . .
" நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய் . .
" எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர் . .
" இறைவனுக்கு நன்றி செலுத்து . .
"நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய் . .
" எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர் . . இறைவனுக்கு
நன்றி செலுத்து . .
" நீ உடல் " ஆரோக்கியத்துடன் " உலா வருகின்றாய் . .
" எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர் . .
இறைவனுக்குநன்றி செலுத்து . .
" நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய் . .
" எத்தனையோ மண்ணறைவாசிகள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் . .
" நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவற்கு உனக்கொரு இறைவன் இருக்கின்றான் . .
" எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் . .
இறைவனுக்கு
நன்றி செலுத்து . .
"நீ நீயாக இருக்கின்றாய் . .
" எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர் . .
" இறைவனுக்கே நன்றி செலுத்து . .
" எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இரு . .
" இறைவனுக்கு நன்றி செலுத்து . .
" பிறரை மகிழ்வி . , , .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக