செவ்வாய், 20 செப்டம்பர், 2016

கொய்யாப்பழம்

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து
நிறைந்தது நம்ம *"நாட்டு கொய்யா" தான் நிரூபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம் !*
=========
நாட்டு கொய்யாப்பழம் : இதன் அருமை தெரிந்தோ,
தெரியாமலோ நாம்
இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம்.
இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து
கொண்டால் மிகவும் அக்கறையோடு
உட்கொள்வோம்.

=========

*நோய் எதிர்ப்பு சக்தி தரும்*

=========

கொய்யாவில் உள்ள *வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம்.*
*வைட்டமின் 'சி' சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.*

=========

கொய்யாவில் உள்ள *காப்பர் சத்து ஹார்மோன்கள் சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய் உதவுகின்றது.* *நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.*

=========

புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய்
குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள *வைட்டமின் 'சி' சத்தும், லைகோபேனும்* *திசுக்களை பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும்* *அபாயம் வெகுவாய் குறைகின்றது.*

=========

*சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா.* *நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.*

=========

*கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும் சிறந்ததாகும்.*

=========

இதில் *போலிக் ஆசிட், வைட்டமின் பி9* *இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு* *கொய்யாபழம் உண்ண*
*அறிவுறுத்தப்படுகின்றது.* *இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு* *பாதுகாக்கின்றது.*

=========

*ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த உற்பத்தியைக் கூட்டுகிறது.*

=========

கொய்யாப்பழம் உண்டால்  *இதில் உள்ள 'மக்னீசியம்'* *நரம்புகளையும், தசைகளையும்* *தளர்த்தி விடுவதால் மனச் சோர்வு குறையும்.*

=========

கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும்
*வைட்டமின் பி3,* *பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும்.*

=========
இதில் உள்ள *வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப் போகின்றது.*
=========

*கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடலை சுத்தமாய் வைக்கும்.*

=========
எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே
நல்லது.
=========
காயோ, பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு
கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும்.
வெள்ளை, சிகப்பு இருவகை கொய்யாப்பழங்களு
மே சிறந்ததுதான்.
=========

கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்:

*1 கப் கொய்யாப்பழம் சுமார்* *-* *165 கிராம் எடை கொண்டது*

=========
*கலோரி சத்து 112*
=========
*உப்பு - 0 சதவீதம்*
=========
*மாவுச்சத்து - 8 சதவீதம்*
=========
*கொழுப்பு சத்து - 2 சதவீதம்*
=========
*நார்சத்து - 36 சதவீதம்*
=========
*புரதம் 4 கிராம்*
=========
*வைட்டமின் ஏ - 21 சதவீதம்*
=========
*வைட்டமின் சி - 628 சதவீதம்*
=========
*கால்சியம் - 3 சதவீதம்*
=========
*இரும்பு சத்து - 2 சதவீதம்*
=========
இனி வேண்டாமே மேற்கத்திய மோகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக