கேரடின் மருத்துவப் பயன்கள்
வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல் தடுக்கிறது.
நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.
குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.
மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது .
முகச்சுருக்கத்தை தடுக்கும் கேரட்
இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
கொதிக்க வைத்த கேரட் சாறினை ஆறிய பின் முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளபாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக