விவேகானந்தரின் பொன்மொழிகள்
* உன் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அவர்களின் நட்பில் இருந்து சிறிது காலம் விலகியிரு.
* துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.
* விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்காக அல்ல.
* முடியாது என்று நீ சொல்வதை யெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான்.
* மனிதனுக்குள் ஏற்கனவே மறைந் திருக்கும் பரிபூரண தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி.
* உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
* நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல்.
* நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்திஅற்றது ஆகிவிடும்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
* அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
* உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
* உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
#######$$$$######$$$$####
* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான்
உண்மை ஞானம் உதிக்கும். அந்த உண்மை
ஞானம்தான் நம்பிக்கை.
* அடக்கப்படாமல் உள்ள மனமும்,
அறவழியில் செலுத்தப்படாத மனமும்
நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச்
சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட
மனமும், அறவழியில் செல்லும் மனமும்
நமக்குப் பாதுகாப்பை அளித்திடும்.
உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.
* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை
விடச் சிறந்தவன் ஆவான்.
* காமம், பொன்னாசை
இவைகளால் ஆளப்படும் அற்பர்கள்
பொருட்படுத்தப்படக்கூடியவர்கள்
அல்லர்.
* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை
மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே
நான் மகாத்மா என்பேன்.
* அன்பு நெறியிற் சென்று உலகம்
உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம்
எனப்படும்.
* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர்.
தைரியமுடையோர் ஒருக்காலும் பாவம்
செய்யார்.
* பலமற்ற மூளையில் நாம் எதையுமே
செய்ய இயலாது. அதனால் நாம்
அதைப் பலப்படுத்த வேண்டும்.
* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே
கேட்டை விளைவிப்பது. அச்சமே மரணத்தைத் தருவது.
நமது உண்மை இயல்பை நாம் அறிந்து
கொள்ளாமல்
இருப்பதனால்தான் நமக்கு அச்சம்
ஏற்படுகின்றது.
* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு
அடையாளமாக ஏதேனும் விட்டுச்
செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும்
மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு
இல்லாமற் போய்விடும்.
* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக்
கொண்டால், எஜமானாகும்
தகுதி பின்னர் தானாகவே வரும்.
* அன்புடையவனே வாழ்பவன்.
சுயநலமுடையவனோ செத்துக்
கொண்டிருக்கின்றான் என்றே
பொருள்.
* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.
* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன்
விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே
அறிவாளியாவான்.
* தன்னை அடக்கப்
பழகிக்கொண்டவன் வேறு எதற்கும்
சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே
உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.
* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை
மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை
அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக
வேண்டும்.
* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத்
தூய்மையானவனாகவும், முழு அளவில்
சிரத்தை உள்ளவனாகவும் இரு.
விவேகானந்தரின்
பொன்ம
ொழிகள் - 02
வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு
காரணம். நாம் பலவீனமாக
இருப்பதாலேயே பொய்யும் திருட்டும்
ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு
அகலவில்லை.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற
ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ
ஓரிடத்தில்! அளவற்ற நேர்மையும் அளவற்ற
சிரத்தையும் கொண்டவராக
இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தாம்.
அவர் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு
காரணமாகும்.
உலகில் உள்ள மக்கள் உன்னை
புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி நீ.
உண்மை என்னும் பாதையிலிருந்து
அணுவளவேனும் பிறழாமல் கவனமாக
இருக்க வேண்டும்
மனிதப் பிறவிதான் பிரபஞ்சத்திலேயே மிகச்
சிறந்ததாகும் எல்லா மிருங்களைக்
காட்டிலும் எல்லாக் தேவர்களைக் காட்டிலும்
மனிதர்களே உயர்ந்தவர்கள். மனிதர்களைக்
காட்டிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை.
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும்
தாண்டி மனிதன் அடைய வேண்டிய
அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி
அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள்
எல்லாம் பணத்தால் வருபவை அல்ல.
அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.
மற்றவர்களின் தெய்வீக இயல்பை
வெளிப்படுத்த உதவி செய்வது
தான். நம்முடைய தெய்வீக இயல்பை
வெளிப்படுத்துவதற்கான ஒரே
வழியாகும்.
பொய் சொல்வது
சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.
பொய் சொல்ல
அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான
ஞாபக சக்தி வேண்டும். ஆனால்
பொய் சொல்லி பிறரை
ஏமாற்றுபவர்கள் மற்ற
ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம்
பெறுவார்கள்.
துக்கம் என்பது அறியாமையின்
காரணமாகத்தான் ஏற்படுகிறது. வேறு
எதனாலும் அன்று.
கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்;
மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை
தோள்களுமே; நமக்குத் தேவை. வலிமைதான்
வாழ்வு பலவீனமே மரணம்.
மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து
கொள்ளுங்கள்.
விவேகானந்தரின்
பொன்மொ
ழிகள் - 03
உண்மைக்காக எதையும் துறக்கலாம்;
ஆனால் எதற்காகவும் உண்மையைத்
துறக்காதே.*
வலிமையே மகிழ்ச்சிகரமான,
நிரந்தரமான, வளமான,
அமரத்துவமான
வாழ்க்கை ஆகும்.*
தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த
அன்புடன் பழகுபவர்களே இப்போது
உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.*
இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல்
படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள்
ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.*
வீரர்களே,
கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!*
இளைஞனே,
வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது
தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான
வழியைப் பின்பற்றித் தைரியத்துடன்
வீரனாக விளங்கு!*
உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ
உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.*
நமது
சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த
நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை
முறையாகப் பின்பற்றாமல் போனதுதான்
சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்
விவேகானந்தரின்
பொன்மொ
ழிகள் -04
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாக ஆகிறாய் உன்னை
வலிமை உடையவன் என்று
நினைத்தால் வலிமை படைத்தவன்
ஆவாய்!
உன்னால் சாதிக்க
இயலாத காரியம் என்று
எதுவும் இருப்பதாக ஒருபோதும்
நினைக்காதே!
நான் எதையும் சாதிக்க
வல்லவன்" என்று
சொல். நீ உறுதியுடன்
இருந்தால் பாம்பின் விஷம்
கூட சக்தியற்றது ஆகிவிடும்.
பலமே வாழ்வு; பலவீனமே
மரணம்!
கீழ்ப்படியக்
கற்றுக்கொள்.
கட்டளையிடும் பதவி தானாக
உன்னை வந்து அடையும்.
உற்சாகமாக இருக்கத்
தொடங்குவதுதான்
வெற்றிகரமான
வாழ்க்கை வாழத்
தொடங்குவதற்கான
முதல் அறிகுறி.
அடிமைகளின் குணமாகிய
பொறாமையை முதலில்
அழித்துவிடு.
மிருக பலத்தால் அல்லாமல்
ஆன்மிக பலத்தால் மட்டுமே
எழுச்சி பெறமுடியும்.
சுயநலமின்மை, சுயநலம்
என்பவற்றைத் தவிர,
கடவுளுக்கும் சாத்தானுக்கும்
எவ்வித வேறுபாடும் இல்லை.
நீ செய்த தவறுகளை
வாழ்த்து. அவைகள், நீ
அறியாமலே உனக்கு
வழிகாட்டும்
தெய்வங்களாக
இருந்திருக்கின்றன.
அன்பின் மூலம்
செய்யப்படும்
ஒவ்வொரு
செயலும் ஆனந்தத்தைக்
கொண்டு வந்து தந்தே
தீரும்.
உங்களால் யாருக்கும்
உதவி செய்ய முடியாது.
மாறாகச் சேவைதான்
செய்ய முடியும்.
உனக்குத் தேவையான எல்லா
வலிமையும், உதவியும்
உனக்குள்ளேயே உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக