நவராத்திரி கொலு வைக்கும் முறைகள்...
நவராத்திரியின் சிறப்பு அம்சம்
கொலு வைப்பதேயாகும்.
கொலு
என்பது பல படிகளை கொண்ட
மேடையில் பலவித பொம்மைகளை
நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
ஐம் பூதங்களி ல் ஒன்றான
மண்ணினால் செய்யப்பட்ட
பொம்மைகளை சக்தியின்
அம்சங்களாக எண்ணி நவராத்திரியில்
பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும்
தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா.
இனி நவராத்திரி கொலு எப்படி
அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம்.
கொலு மேடை 9 படிகள்
கொண்டதாக இருக்க வேண்டும்.
1
. முதலாம் படி :–
ஓரறிவு உயிர்களான புல், செடி,
கொடி போன்ற தாவரங்களின்
பொம்மைகள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு
போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு
போன்ற வற்றின் பொம்மை
கள்.
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு
,வண்டு போன்றவற்றின் பொம்
மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள்
ஆகி யவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த
சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர்,
வள்ளலார்) போன்றோரின் பொ
ம்மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக
அதிபதிகள் போன்ற தெய்வங்கள்
தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர்
அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக
ஆதிசக்தி வை க்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து
தெய்வ நிலை யை அடைய வேண்டும்
என்பதற் காகவே இப் படி கொலு
அமைப்பது வழக் கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில்
சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
தெத்துப்பல் திருவாயும்,
முண்டமாலையும் அணிந்தவள். முண்டன்
என்ற அசுரனை சம்ஹாரம் செய்த
சக்தி அவள். இதனால் சாமுண்டா
எனவும் அழைப்பர். இவள்
மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே
இவள் கோபமாக உள்ளாள். மற்றும்
இவளது கோபம் தவறு செ ய்தவர்களை
திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில்
அண்ட சராசரங்களைக் காக்கும
ராஜராஜேஸ்வரி அம்மனாக
அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப்
பொங்கல்.
2. இரண்டாம் நாள் : –
இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி
தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ
(பன்றி)முகமும் தெத்து பற்களும்
உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத
ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை
தாங்கியிருப்பவள். தனது தெத்து
பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளிற்கு மங்கள மய நாராயணி,
தண்டினி, பகளாமுகி போ ன்ற
திருநாமங்களும் உண்டு. இவள் அன்
னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்
லி சூனியம், எதிரிகள்
தொல்லையிலிருந்து விடுபட இவளின்
அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற
லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது
சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன்
தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப
பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும்
சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை
வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :-
தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா
ணியாக வழிபட வேண் டும். இவளை
மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும்
அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.
கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம்
கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோக த்தை பரிபா லனம்
செயபவளும் இவளே யாகும்.
பெரிய பெரிய பதவிகளை அடைய
விரும்புப வர்களிற்கு இவளின் அருட்பார்வை
வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை
கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு,
சம்பள
உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே
யாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு
கரும்பு கொடுத்த
அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :-
வெண் பொ ங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக
வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில்
ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின்
வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண
கோலத்தில் காட்சி
யளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை
சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி
தேவி யாக வழிபடவேண்டும். அன்னை
மகேஸ்வரனின் சக்தியா வாள். திரிசூலம்,
பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப
வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள்.
அளக்கமுடியாத பெரும் சரீரம்
உடையவள். சர்வ மங்களம் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளி
கள் உழைப்பின் முழுப்பலனை பெற
அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு
மோட்சம் கொடுத்த
அலங்காரத்தில் காட்சி யளிப்பார்
கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவி யாக
வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல்
கொடியும் உடையவள். தேவ சேனா
திபதியான முருக னின் வீரத்திற்கு
ஆதாரமானவள். ஓங்கார
சொரூபமானவள். சகல
பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத் தை
தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன்
பாணணிற்கு அங்கம் வெட்டிய
அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :-
தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகா லட்
சுமியாக வழிபட வேண்டும். கையில்
ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில்,
கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டா
யுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு,
சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை,
கமண்டலம் ஆகியவற்றைக்
கொண்டிருப்பவள். விஷ்ணு
பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த
நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில்
அமர்ந்து சகல ஐசவரியங்களையும்
தருபவள் அன்னை யாகும்.
இ
ன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி
கோலத்தில் மக்களிற்கு அருள்
பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்
கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக
வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம
தலையும் உடையவள். கூரிய நகங்களுடன்
சங்கு,
சக்கர தாரிணியாக சிம்ம
வாகனத்தில் காட்சி தருபவள். சத்ரு
க்கள் தொல்லையில் இருந்து விடுபட
அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா
சுர மர்த்தினி அலங்காரத்தில்
காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப்
பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட
வேண்டும். அன்ன வாகனத்தில் இரு
ப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள்.
ஞானசொரூபமானவள்.
கல்விச் செல்வம் பெற அன்
னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை
செய்யும் கோலத்தில் அருளாட்சி
புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர
வடசல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக