*எலுமிச்சையைக் கொண்டு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி*
வீட்டில் உள்ள பொருட்களில் முக்கிய இடம் பிடிப்பது எலுமிச்சை.
இந்த அமிலத் தன்மை கொண்ட பழம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள பல வழிகளில் உதவும்.
முதலில் வீட்டில் உள்ள வேதிப்பொருட்களால் ஆன சுத்தம் செய்யும் பொருட்களை களையுங்கள்.
இந்த ஆபத்து நிறைந்த பொருட்கள் உங்கள் நுரையீரல் மற்றும் சருமத்தை கடுமையாக பாதிக்கும் தன்மைகளைக் கொண்டவை.
எனவே இவற்றை வீட்டில் அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எழுமிச்சையையும் வினிகரையும் வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருளாகப் பயன்படுத்தும் போது அவை நல்ல பலன் தருவதோடு பிடிவாதமான கறைகளையும் மற்றும் துர்நாற்றத்தையும் போக்க வல்லவை என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
சரி, இன்னும் ஏன் யோசனை செய்கிறீர்கள்..?
எலுமிச்சையைப் பயன்படுத்தி உங்கள் வீட்டை சுத்தப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
இது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும்.
ஜன்னலை சுத்தப்படுத்த ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும் சோடா உப்பையும் கலந்து, அதில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழியுங்கள்.
ஒரு துணியை இதில் நனைத்து ஜன்னல் சட்டங்களைத் துடைத்தால், உங்கள் ஜன்னல் சுத்தமாக பளீரென மின்னும்.
சமையல் அறை சிங்கில் உபயோகிக்க உங்கள் கிச்சன் சிங்கை சுத்தம் செய்யவும் எலுமிச்சை பயன்படும்.
இரு எலுமிச்சைப் பழங்களை நறுக்கி, அதை சிங்கைச் சுற்றி பிழிந்து தெளியுங்கள்.
கொஞ்சம் கல் உப்பையும் தெளித்து பிரஷ்ஷைக் கொண்டு நன்கு தேய்த்து சற்று வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
டாய்லெட்டில் எலுமிச்சையின் பயன் டாய்லெட் சீட்கள் சில காலம் கழித்து நிறம் மங்கிவிடும்.
அதன் உண்மையான நிறத்தைத் திரும்பப் பெற சீட்டின் மீது எலுமிச்சை சாறை பிழியுங்கள்.
சிறிது சமையல் சோடாவை தூவி பிரஷ்ஷைக் கொண்டு நன்கு தேய்த்து விடுங்கள்.
இந்த முறையை தொடர்ந்து வாரம் இருமுறை செய்து வர டாய்லெட் சீட் பளிச்சென இருக்கும்.
பாத்திரம் துலக்க எலுமிச்சை நீங்கள் அசைவப் பிரியர் என்றால் பின்வரும் எளிய எலுமிச்சை கொண்டு சுத்தப்படுத்தும் யோசனையை முயன்று பாருங்கள்.
உங்கள் பாத்திரங்களைச் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவிய பிறகு ஐந்து மிலி வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சைச் சாற்றினைத் தெளியுங்கள்.
கையைக் கொண்டு பாத்திரத்தை ஐந்து நிமிடம் வரை தேய்த்து விடுங்கள்.
இது வாடையைப் போக்குவது மட்டுமல்லாமல் கறையையும் போக்கும்.
தரையைத் துடைக்க எலுமிச்சை உங்கள் வீட்டுத் தரையை பளிச்சிடச் செய்ய எலுமிச்சை ஒரு சிறந்த வழி.
எலுமிச்சை பழத்தை தரையில் சில துளிகள் பிழிந்து அதனை ஈரத்துணி கொண்டு துடையுங்கள்.
பத்து நிமிடம் கழித்து வினிகர், உப்பு மற்றும் தண்ணீர் கலந்த கலவையை கொண்டு மாப் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் தவழும் குழந்தை இருந்தால், இதை நீங்கள் செய்து வருவது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக