வெந்தயம் இப்படி பயன்படுத்தினால் நன்மை அதிகமாக இருக்கும்!
வெந்தயக் கீரை சாப்பிடுவதால் என்னபயன்கள் தெரியுமா....!
வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும். இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும். நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில்
·
1) 86.1 சதவீதம் ஈரச்சத்தும்,
2) 4.4சதவீதம் புரதச்சத்தும்,
· 3) 1.1சதவீதம் நார்ச்சத்தும்,
· 4) 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும்,
· 5) 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது.
பயன்கள்:
1. வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
2. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
3. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
4. வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
இடுப்பு வலு நீங்கும்
வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக