திங்கள், 24 பிப்ரவரி, 2020

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட மாதுளம் பழம் !

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட மாதுளம் பழம் !


மாதுளம் பழம்
மாதுளம்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை.
மாதுளம் பழம் வயிற்று வலிக்கு சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள நீர் சத்துகளை அதிகரிக்கும் தன்மையும் மாதுளம் பழத்திற்கு உண்டு.
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது
Credit:www.google.co.search
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
மார்பக புற்றுநோய் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.உடலில் ஏற்படும் சில ஹார்மோன் குறைபாடுகள் காரணமாகவே மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனவே மாதுளம் பழம் சாப்பிடுவதால் இந்த ஹார்மோன் குறைபாட்டிலிருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாதுளம்பழத்தில் உள்ள சில அமிலச் சத்துகள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கின்றன.
மாதுளம்பழத்தை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தையும் சக்தியையும் அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக