திங்கள், 24 பிப்ரவரி, 2020

மாற்றப்பட வேண்டியது உணவு அல்ல... மாறவேண்டியது நமது உணவுப் பழக்கவழக்கம்...

மாற்றப்பட வேண்டியது உணவு அல்ல... மாறவேண்டியது நமது உணவுப் பழக்கவழக்கம்...


உணவு விஷயத்தில் நாக்கை அடக்க முடியாமல் வயிறுமுட்ட தின்றுவிட்டு பழியை உணவுப்பொருட்களின் மீது போடுவதில் நாம் கைதேர்ந்தவர்கள். அந்த வகையில் அதிமாக சபிக்கப்பட்டவை வாயு பொருட்கள் என்ற செல்லக்கூடிய கிழங்கு வகைள், வாழைக்காய், பருப்பு வகைள் போன்றவை. பசி உணர்வு ஏற்படாத நிலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு போண்டா, வாழைக்காய் பஜ்ஜி போன்றவற்றைச் சாப்பிடுகிறோம்.
எந்த விதமான உடல் உழைப்பும் இல்லாமல், பசி என்ற உணர்வு கொஞ்சம் கூட வராமல் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிமானக் கோளாறு ஏற்ப்பட்டு அதில் முதலில் உறுவாகும் கழிவு கெட்ட வாயுக்கள். அன்றாடம் வெளியேற முடியாத இந்த கெட்ட வாயுக்கழிவுகள் உடலில் ஆங்காங்கே தங்கி காலையில் தோள்பட்டை, நண்பகல் நடுமுதுகு, மாலையில் வயிறு, இரவில் இடுப்பு என்று அப்படியே நகர்ந்து நகர்ந்து வலியானது கொடுமைப்படுத்தும்.
குனியவும் முடியாது.. நிமிரவும் முடியாது... பாடாய் படுத்தும். சில சமயம் நெஞ்சில் வந்து மாட்டிக்கொண்டு மூச்சு விடும்போது குத்துவது போன்ற வலியை கொடுக்கும். நீங்கள் ஹார்ட் அட்டாக் போல இருக்கு என்று பயந்துபோய் 108க்கு போன் செய்வீர்கள். அதன் பின்னர் உங்களுக்கு அவசரசிகிச்சை கொடுக்கப்படும். நீங்களும் லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு மொய் எழுதிவிட்டு வருவீர்கள்.... 
சர்க்கரை நோய் உட்பட பெரும்பாலான நோய்கள் நமக்கு வருவதற்கு முன்னர் இந்த கேஸ் டிரெபிள் என்ற வாயு பிடிப்பு வந்துவிடும். அப்போதே நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். வயிறு கெட்டுவிட்டது, பசித்துச் சாப்பிடவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 
பசியை உணர்ந்து உருளைக்கிழங்கு, வாழைக்காய், என்று எதைவேண்டுமானாலும் சாப்பிடுங்கள் கேஸ் ப்ராப்ளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பசிக்காமல் அமிர்தத்தையே சாப்பிட்டாலும் தேர் ஈஸ் நோ யூஸ். கேஸ் டிரபிள் முதல் கேன்சர் வரை நோய்களை வரவழைத்துக்கொண்டது நம்முடைய முறைகேடான பழக்கவழக்கங்களால்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சிறுவர்களாக, இளைஞர்களாக இருந்த போது பத்து பஜ்ஜி சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாத வாழைக்காயும் உருளையும் இப்போது ஒன்று சாப்பிட்டதும் உயிரை வாங்குகிறதே...! 
பிரச்னை உணவிலா....? நம்மிடத்திலா....?
அடிக்கடி கேஸ் தொந்தரவு உருவாகிறதென்றால் நாளை நீங்கள் சர்க்கரை, பி.பி., மூட்டுவலி... போன்ற நோய்கைளால் அவதிப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம். இப்போது உஷாராகுங்கள். நீங்கள் சரிசெய்ய வேண்டியது உங்கள் ஜீரணத்தை. உணவுப் பொருட்களின் மீது பழிசுமத்துவதை விட்டு விட்டு, நம் உணவு பழக்கத்தையும், சாப்பிடும் முறையையும் ஒழுங்கு செய்வோம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக