செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கடலூர் மாவட்ட சிறப்புகள்



கடலூர் மாவட்ட சிறப்புகள்

கடலூர் மாவட்ட வரலாறு
முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர் பெற்றது.

பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எல்லைகள்
கடலூர் மாவட்டம், 3,564 சதுர.கி.மீ. பரவியுள்ளது. வடக்கில் விழுப்புரம் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கே நாகப்பட்டினம், அரியலூர்,மாவட்டமும், மேற்கே பெரம்பலூர் மாவட்டமும் உள்ளது.

வரலாறு
இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன, கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் , முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்படுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

ஆங்கிலேய ஆட்சி
ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது (1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத் என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782) ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டனர். இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது.

இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர். சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும் பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள் துவங்கிய சர்க்கரை ஆலையின் (நுஐனு Pயசசலள டுவன (1780)) சரக்குகள் கடலு}ர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பெயர்க்காரணங்கள்
புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர் வைக்கப்பட்டுள்ளது
கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில் நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆறுகள்

கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அணைக்கட்டுகள்
 திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன. வீரணாம் ஏரி சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும்.

அலையாத்திக் காடுகள்
 பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (ஆயபெசழஎந) உள்ளன.

தொழில்வளம்
நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது.

சுற்றுலாத் தலங்கள்
 மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கி.பி.1110 ல் முதலாம் குலோத்துங்கன் (சோழர்களால் கட்ட பட்டது ) பிச்சாவரம், கெடிலத்தின் கழிமுகம், கடலூர்தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில் மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது.

சிதம்பரம்
சிதம்பரத்தை தில்லை என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது.படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம்.

பிச்சாவரம்
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலாதுளமாகும். கல்கத்தாவிலிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி

சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது. 

பாடலீஸ்வரர் கோயில்
கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூரில் அமைந்துள்ள தொன்மையான சிவத் தலமிது.இங்குள்ள பிடாரியம்மன் சன்னதியும் பிரபலமானது.பிரம்மோத்ஸவம் சிறப்பாக கொண்டாடபடுகிறது.அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, ‘சொற்றுணை வேதியன்’ என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் கரையேறவிட்ட குப்பம் என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

வடலூர்
கடலூர் – விருத்தாசலம் சாலையில் வடலூர் அமைந்துள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோணமுடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் ‘ஒளி வழிபாடு’ நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலு}ருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் சித்திவளாகம் என்பது பெயர்.

வெள்ளி கடற்கரை
கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு கண்ட கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரிட்டிஷ் உருவாக்கிய முக்கிய கோட்டை செயிண்ட் டேவிட் உள்ளது.

முக்கிய இடங்கள்
வெள்ளி கடற்கரை (கடலூர்)
செயிண்ட் டேவிட் கோட்டை
பாடலீஸ்வரர் கோயில்
திருவந்தீபுரம் சுவாமி கோயில்
திருவந்தீபுர ஹையக்றேவேர் கோயில்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி) நெய்வேலி
 சிதம்பரம் நடராஜர் கோவில்
பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்
திருமுடம் பூவராக சுவாமி கோயில்
வடலூர் வள்ளலார் சத்ய ஞான சபை
குறிஞ்சிபடி சுப்றை சுவாமிகள் கோயில்
வேங்கடம்பெட் வேனுகோபல சுவாமி கோயில்
திருவதிகை வீரடநேச்வர் கோயில்
திருச்சோபுரம் சுவாமி கோயில் சிறப்புகள் : கடலூர் மாவட்டம் ( தென்னாற்காடு )
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம்.
சங்ககால பெயர் கூடலூர் .
சோழநாட்டு படைவீரர்களின் கோட்டை
பிற்கால பல்லவர் என்றும், சோழர் சம்மந்தி என்றும் பெருமை கொண்ட காடவர் மன்னர்கள் பிறப்பிடம்.
ஆதிகாலம் முதல் சோழர்களுக்கு முடிசூடும் பேரு பெற்ற இடம்.
தில்லை நடராஜன் கோவில் உள்ள ஊர் . ஈசன் சுயம்பாக காட்சியளிக்கிறார். ஈசன் பிறந்த இடம் என்றும் புகழப்பட்ட இடம் இது.
சரஸ்வதிக்கே ஞானம் தரும் ஹைகிரீவர் உள்ள ஊர்.
முருகர் சுயம்பாக காட்சி அளிக்கும் கொளஞ்சியப்பன் இந்த ஊரில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் முருகன் வில்லோடு காட்சியளிக்கும் வில்லுடையான்பட்டு உள்ளது.
 பண்ருட்டி ஊர் ஆனது பலாப்பழத்திற்கு பெயர்பெற்றது.
பலா, முந்திரிகளுக்கு சிறப்பு பெயர்பெற்ற ஊர்
இந்தியாவின் மாபெரும் நிலக்கரி சுரங்கம் நெய்வேலியில் உள்ளது.
 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கியது. தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பிச்சாவரம், உலகின் மிகப்பெரிய மாங்கிரோவ் காடுகள்.
சோழர்கள் வழிவந்தவர்கள் பிச்சாவரத்தில் உள்ளனர்.
 வள்ளலார் பிறந்த ஊர் .
திருப்பாபுலியூர் , திருவதிகை , திருவந்திபுரம் , ஸ்ரீமுஷ்ணம் போன்ற எண்ணற்ற புண்ணியஸ்தலங்கள் உடையது .
வீராணம் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் அருகில் உள்ள நகரம் காட்டுமன்னார்கோயில். வீராணம் ஏரி சிதம்பரத்திலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ளது. இது சோழர்களால் கட்டப்பட்ட ஏரியாகும்.
 சிறைவாசம் சென்ற முதல் உப்பு சத்தியாக்ரஹம் போராட்ட பெண்மணி திரு.அஞ்சலை அம்மாள் பிறந்த ஊர்
கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருகிறது. இங்கு நீர்வளம், ஏரிகள், கனிவளம், வேளாண்மை, ஆலைகள், மின்சார தொழில்,கடல் சார்ந்த தொழில்கல்ளும் , செயிண்ட் டேவிட் கோட்டை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்ற பல சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக