சனி, 1 பிப்ரவரி, 2020

தாலிக்கயிற்றின் மகிமை


தாலிக்கயிற்றின் மகிமை

‘மங்கல நாண்’ என்று கொண்டாடப்படும் மஞ்சள் பூசிய தாலிக் கயிறைத்தான் சுமங்கலிகள் தங்கள் கழுத்தில் அணிய வேண்டும். தாலி கோத்த சங்கிலி சிறப்பல்ல. தாலிக் கயிறுக்கு தனி மகிமை உண்டு. ஏனெனில், சுமங்கலிகள் ஸ்நானம் செய்யும்போது, தாலிக் கயிற்றில் மஞ்சள் பூசிக் குளித்தால், அவர்கள் மாங்கல்ய பலம் பெருகும்.
தங்க சங்கலியில் திருமாங்கல்யம் அணியவேண்டாம்
எனக்கு தெரிந்து பல உயர் இடத்தில் இருப்பவர்கள் பண தட்டுபாட்டுக்கு திருமாங்கல்யம் தங்க சங்கலியே எடுத்துக்கொண்டு போய் அடகு வைக்குறங்க.
அதுவரை திருமாங்கல்யம் அணிவதில்லை
அது இல்லத்தில் பல பிரச்சினைகளை உண்டு பண்ணும்.
அதே போல் நைனாலில் விற்க்கும் அதையும் அணியக்கூடாது.
திருமாங்கல்யம் எப்போதும் விலை இல்லதா பொருள்
வெளியே எவ்வளவு ஆபரணங்கள் போடுங்கள்.
ஆண்களும் மொட்டியே கழட்ட வேண்டாம்.
15 வருடம் முன்பு வரை ஆண்கள் கால்களில் மெட்டி இருக்கும்.


தற்போது குடும்ப சண்டையில் திருமாங்கல்யம் கழட்டி தூக்கி எரிவது வழக்கமாகபோய்விட்டது.
ஆயிரம் சண்டை இருந்தாலும் அந்த கோபத்தை திருமாங்கல்யம் மீது காட்ட வேண்டாம்.
இது உங்களை பாதிக்காது வர போற சந்நதியே பாதிக்கும்.

அலுவலகத்திற்க்கு மங்கலத்தில் வீட்டிலே கழட்டி வைத்து போவது  சரியான முறை அல்ல

காலை, மாலை இரு வேளைகளிலும் தீபமேற்றி ஸ்வாமியை நமஸ்காரம் செய்யும்போது, தாலிக் கயிற்றில் ஒரு குங்குமப் பொட்டும், நெற்றியில் வகிடு ஆரம்பத்தில் ஒரு குங்குமப் பொட்டும் வைத்துக் கொண்டால் கணவனின் ஆயுள் தங்களின் ஆயுள் நீடித்து வளரும். லட்சுமி கடாட்சத்துடன், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

தாலிக் கயிற்றில் உள்ள 9 இழைகளும், தெய்விக குணம், இல்லற வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுதல் தூய்மை, மேன்மை, நற்பண்புகள், ஆற்றல், விவேகம், தொண்டு, அடக்கம் ஆகிய 9 பண்பு நலன்களும், ஒரு சுமங்கலிப் பெண்மணியிடம் அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்குகின்றன. எனவே, சுமங்கலிகள் சங்கிலியில் தாலியைக் கோத்துப் போட்டுக் கொள்வதைவிட, மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோத்து கழுத்தில் அணிய வேண்டும் என்றும், தினமும் மஞ்சள் பூசிக் குளிக்க வேண்டுமென்றும் பெரியோர்கள் வற்புறுத்திக் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக