சனி, 1 பிப்ரவரி, 2020

ரோஸ் டே முதல் ஹக் டே வரை... காதலர் தினம் உருவான கதை! #காதலர்_தினம்


ரோஸ் டே முதல் ஹக் டே வரை... காதலர் தினம் உருவான கதை! #காதலர்_தினம் 

உலகம் முழுவதும் பரவலாகவும் மிகச்  சிறப்பாகவும்  கொண்டாடப்படுவது காதலர் தினம். மேற்கத்திய பழக்கமாக இருந்தாலும் பின்னாளில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் ரோமானிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வாலன்டைன்ஸ் தின கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வாலன்டைன்ஸ் தினத்தினைப் பெரும்பாலும் காதலர்கள்தான் கொண்டாடுகின்றனர் என்பதினால் இது காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காணும் அனைத்திலும் நிறைந்திருக்கும் இந்தக் காதல் தினத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள்...


வாலன்டைன்ஸ் தினம் எப்படி வந்தது :

ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சிக் காலத்தில் `திருமணம் செய்வதால் ஆண்கள் வீரத்தை இழக்க நேரிடும். அவர்கள் போரில் சரியாகப் பங்களிக்கமாட்டார்கள் நாட்டு மக்கள் யாரும் இனி திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஏற்கெனவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தவர்கள் கூடத் திருமணம் செய்யக் கூடாது’ என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், அரசரின் அறிவிப்பை மீறி பாதிரியார் வாலன்டைன் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவியது. பல காதல் ஜோடிகள் அங்கு படையெடுத்தனர், அவர்களுக்கு வாலன்டைன்  திருமணம் செய்துவைத்தார். இந்தச் செய்தியை அறிந்த  மன்னர், பாதிரியாரைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டு, பின் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவர் சிறையில் இருந்த காலகட்டத்தில் சிறைக் காவலரின் பார்வையற்ற மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்தது. தனக்குக் கண் பார்வை கிடைத்ததை போல, பல மடங்கு சந்தோஷத்தில் இருந்த அஸ்டோரியசுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. இவர்களின் காதல் விஷயம் தெரியவரவே, அவள் வீட்டில் சிறைவைக்கப்பட்டாள்.

வாலன்டைனுக்கு தண்டனை நிறைவேற்றும் நேரம் வந்தது. தண்டனை நிறைவேறுவதற்கு முன் தன் காதலிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அந்தக் கடிதத்தின் கடைசியில் ``உன்னுடைய வாலன்டைனிடமிருந்து" என்ற வார்த்தை எழுதப்படட்டிருந்தது. அவர் கொல்லப்பட்ட அந்த நாள் கி.பி.270, பிப்ரவரி 14. இந்த நாளைத்தான் உலகம் முழுவதும் பின்னாளில் வாலன்டைன்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த வரலாற்றுக்குப் பல்வேறு கதைகளும் உண்டு. ஆனால், பெரும்பாலும் பரவலாகப் பேசப்படுவது இந்தக் கதைதான். இதற்கான வரலாற்றுச் சான்றுகள் இதுவரை சரிவர கிடைக்கப்படவில்லை

ஏழு நாள் கொண்டாட்டம்... வாலன்டைன் டே வாரம்

ரோஸ் டே : பிப்ரவரி-7

இது, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு ரோஜாவைக் கொடுத்து ஒருவர் தன் அன்பை, காதலை வெளிப்படுத்தும் நாள். காதலை வெளிப்படுத்த சிவப்பு ரோஜா, நட்பை வெளிப்படுத்த மஞ்சள் ரோஜா, சமாதானத்துக்கு வெள்ளை ரோஜா கொடுப்பது வழக்கம்.

ப்ரப்போஸ் டே :பிப்ரவரி-8

நம் மனதுக்கு மிக நெருக்கமானவரிடம் நமது அன்பை, காதலை வெளிக்காட்டும் நாளாகும்.

சாக்லேட் டே : பிப்ரவரி-9

இந்த நாளில் நமக்கு முக்கியமானவர்களுக்கு சாக்லேட் பரிசளித்து நமது அன்பை, பாசத்தை, காதலை அவர்களிடத்தில் வெளிப்படுத்தலாம்.

டெடி டே : பிப்ரவரி-10

இந்த நாளில் டெடி பியர் பொம்மையைப் பிடித்தவர்களுக்குப் பரிசளித்து அன்பை வெளிப்படுத்தலாம். பெரும்பாலும் இந்த நாளில் காதலர்கள் மட்டுமல்லாது நண்பர்கள், நமக்குப் பிடித்தவர்கள், உடன் பிறந்தவர்கள் என்று பலரும் டெடி பியர் பொம்மைகளைப் பரிசளிப்பார்கள்.

பிராமிஸ் டே : பிப்ரவரி-11

இந்த நாளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. நமக்குப் பிடித்தவர்களிடம் அந்த உறவின் தன்மையையும், அந்த உறவுக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி, உறவின் உன்னதத்தை உறுதிப்படுத்தும் நாள்.

ஹக் டே : பிப்ரவரி-12

உங்களின் அன்பை வெளிப்படுத்த உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கியமானவர்களை அரவணைக்கும் நாள். இந்த நாளில் தங்களின் வாழ்க்கை துணையை, நண்பர்களை, குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவரிடத்திலும் நீங்கள் உங்கள் அன்பை வெளிக்காட்டலாம்.

கிஸ் டே : பிப்ரவரி-13

முத்தம் அன்பின் வெளிப்பாடு. இந்த முத்த தினத்தில், தங்களின் நெருக்கமானவருக்கு முத்தம் கொடுத்து அவர்களின் இந்த நாளைச் சிறப்பாக்குங்கள்.

வாலன்டைன்ஸ் டே : பிப்ரவரி-14

ஏழு நாள் கொண்டாட்டத்தின் இறுதி நாள் இது. உலகின் அதிகப்படியான மக்களால் கொண்டாடப்படும் நாளும் இதுவே. வாலன்டைனை நினைவு கூறும் வகையில் இந்த நாள் கொண்டாடப்பட்டும். காதலருக்கு இந்த நாள் மிக முக்கியமான நாள். உங்கள் காதலை வெளிப்படுத்த இதுவே சிறந்த நாள்.


வாலன்டைன்ஸ் டே அன்று எந்த நிற ஆடை அணிந்தால் என்ன அர்த்தம்...

பச்சை:

உங்கள் காதலுக்காகவே காத்திருக்கிறேன்.

நீலம்:

நான்  இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் காதலைச் சொல்லலாம்.

மஞ்சள்:

ஏற்கெனவே காதலில் தோல்வி அடைந்தவர்.

கறுப்பு:

காதலில் எனக்கு விருப்பம் இல்லை. சொல்லும் காதல் நிராகரிக்கப்படும்.

ஆரஞ்சு:

இன்று என் காதலை சொல்லப்போகிறேன்.

பிங் நிற உடை :

காதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

கிரே நிற உடை:

காதலில் ஆர்வம் இல்லை.

வெள்ளை நிற உடை:

ஏற்கெனவே காதலிக்கிறேன்.


சில அறிய வரலாற்று நிகழ்வுகள் :

1415-ல் அஜன்கோர்ட் போரில் சிறைபிடிக்கப்பட்டு இங்கிலாந்து சிறையில் இருந்த சார்லஸ் டக் ஆப் ஓர்லன்ஸ் தன் மனைவிக்கு எழுதிய காதல் கவிதை இன்றும் பிரிட்டிஸ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. இதுவே உலகின் மிகவும் பழைமையான காதல் கவிதை.

1477-ல் மார்கெரி பிரேவ்ஸ் தன் வருங்கால மனைவிக்கு எழுதிய காதல் கடிதம். இன்றும் பிரிட்டிஸ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. இதுவே பழைமையான காதல் கடிதம்.

1490-ல் கைகளால் செய்யப்பட்ட முதல் காதல் வாழ்த்து அட்டை.

1497-ல் அச்சடிக்கப்பட்ட முதல் காதல் வாழ்த்து அட்டை. இது லண்டனில் உள்ள தி யார்க் காஸ்டில் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக